ஐராவதம் மஹாதேவன் காலமானார் . சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமா இருக்கவே
வாய்ப்பு அதிகம் என்பதை தொடர்ந்து
ஆதார பூர்வமாக நிறுவியவர் திரு ஐராவதம் மஹாதேவன்..
தஞ்சை மண்ணின் மைந்தரான அவர் உலக தமிழ் மாநாட்டில் மரியாதை செய்ய பட்டவர் என்பதும் நேருவால் பாராட்ட பட்டவர் என்பதும் அவரது கல்வெட்டியல் ஆய்வின் நீட்சி ..
அன்னார் நேற்று மரணமடைந்ததாக தகவல் கிடைத்தது...
ஆழ்ந்த இரங்கல்கள்...
தினமணி :சென்னை: தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் (88), சென்னையில் இன்று அவரது இல்லத்தில் அதிகாலையில் காலமானார்.

நீண்ட நாள்களாக உடல்நலம் இல்லாமல்
சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில்
இன்று அதிகாலை 4 மணி அளவில் காலமானார். அவரது இறுதி சடங்கு, சென்னை பெசன்ட்
நகர் மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
ஐராவதன் மகாதேவன், பத்மஸ்ரீ விருது பெற்ற
தமிழகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளராவார். 1930ல் திருச்சி அருகே உள்ள
மண்ணச்சநல்லூரில் பிறந்தவ அவர், 1954 முதல் 1981 வரை இந்திய
ஆட்சிப்பணியிலும், 1987 முதல் 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும்
பணிபுரிந்தார்.
சிந்து எழுத்துகள், பிராமி எழுத்துகள்
(குறிப்பாக தமிழ்ப் பிராமி எழுத்துகள்) மீதான ஆர்வம் அவரை கல்வெட்டு
எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றிய
ஆராய்ச்சியில் இறங்கிய மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துகளைப் பற்றிய
ஆய்வுகளை மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக