மின்னம்பலம்: இணையதள
ஊடகம் மற்றும் இணையதள செய்தி இதழ்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு
மத்திய அரசு ஒரு கமிட்டி அமைப்பதை எதிர்த்து தகவல் மற்றும் ஒலி பரப்பு
அமைச்சர் ஸ்மிருதா இராணிக்கு பத்திரிகையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த கடிதமானது 100 பத்திரிகையாளர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் நியூஸ்லாண்டிரியைச்சேர்ந்த மது திரெஹன் ,மூத்த பத்திரிகை ஆசிரியர் பரஞ்சாய் குஹா தாக்கூர்த்தா,ஸ்குரோல் இதழின் ஆசிரியர் நரேஷ் பொ்னான்டஸ் தி வயா் இதழைச்சேர்ந்த எம்கே வேணு, நியூஸ்மினிட் ஆசிரியர் தான்யா ராஜேந்திரன் , சிட்டிசன் ஆசிரியர் சீமா முஸ்தபா மற்றும் குயின்ட் இதழைச் சேர்ந்த ரீத்து குமார் ஆகிய முக்கிய பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களும் கையெழுத்திட்டுள்ளனா்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதள ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் கமிட்டியை நியமிக்கும் நடவடிக்கையை எதிர்த்து பிரபலமான பத்திரிகையாளர்களும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தி வயர் இதழின் நிறுவன ஆசிரியர் எம்கே.வேணு இணையதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஊடகம் அதன் இயல்பான தன்மையாகவே பரந்த உலகளவில் ஜனநாயக மதிப்பீடுகளை வளர்க்கிறது. அவற்றை பாரம்பரிய ஊடகத்தை போன்று கட்டுப்படுத்தவோ ,ஒழுங்குபடுத்தவோ முடியாது,
இணைய தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஊடகமும் உலகளாவிய ஊடக தளங்களான குகூள் மற்றும் முகநுால் போன்றவை தங்களது உள்ளடக்க அமைப்பையும் தகவல் விநியோக முறையையும் தேசிய அரசுகள் எளிமையாக கட்டுப்படுத்த முடியாத அளவில் அமைத்துள்ளன. கட்டுப்படுத்த அவர்கள் முயற்சிக்கவும் முடியாது. அது ஒரு சுதந்திரமான ஜனநாயக தளமாகும. அது அப்படியே நீடிக்கும்.எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப்ஃரி லேன்ஸ் பத்திரிகையாளர் கீதா சேசு என்பவர் டிஜிட்டல் ஊடகத்தை ஒழுங்குபடுத்த முயற்சிப்பது ஏமாற்றமளிக்கிறது , ஒரு கமிட்டி அதிகாரிகள் ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளாக எப்படி ஆக முடியும்? வளர்ந்து வரும் ஊடகத்தை கட்டுப்படுத்திடுவது அபாயகரமான ஒன்றாகும் என்று எச்சரித்துள்ளார்
இதை கலந்தாலோசித்து செய்ய வேண்டிய ஒரு நடவடிக்கையாகும் என்று நியூஸ்லாண்ட்ரியின் இணை நிறுவனர் மது திரெஹான் தெரிவிக்கிறார்.
சிட்டிசன் நிறுவன ஆசிரியரான சீமா முஸ்தபா மாற்று கருத்துகள் ,கருத்து வேறுபாடுகள் என்றாலே அச்சப்படும் ஒரு அரசின் பாதுகாப்பில்லாத உணர்வின் வெளிப்பாடாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார். ஒழுங்குமுறை என்பது அரசை விமர்சிப்பதை ஒடுக்’குவதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூஸ் 18ன் மற்றும் குயின்ட்டில்லியன் மீடியாவின் நிறுவனரான ராகவ் பாகல் இணையதளத்தில் வரும் பிரச்சினைக்குரிய விஷயங்களை உலகிலுள்ள மற்ற ஜனநாயக நாடுகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக