திங்கள், 30 ஏப்ரல், 2018

மாபெரும் இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைந்தார் .. இலங்கையின் சத்யஜித் ரே .....


Ajeevan Veer :இலங்கையின் சத்யஜித் ரே மறைந்தார்.
1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி பிறந்த இலங்கையின் திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் 2018 ஏப்பரல் 29ம் திகதி தனது கலையுலக வாழ்வை விட்டு விடை பெற்றார்.
ரேகாவ (கோடு) என்ற திரைப்படத்தின் மூலம் 1956ம் ஆண்டு இலங்கை திரைப்படத் துறைக்கு பிரவேசித்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் , சந்தேசய ( நிருபம்) 1956 , கம்பெரலிய (கிராமத்தின் புரட்சி) 1960 , தெலொவக் அத்தர ( இரு உஒகங்களின் நடுவே) 1963 , ரன் சளு ( தங்க அங்கி) 1967 , கொளு கதவத்த ( ஊமை இதயம்) 1968 , அக்கர பஹ (ஐந்து ஏக்கர்) 1969 , நிதானய (புதையல்) 1972 , தாச நிசா ( கண்களுக்காக) 1972 , The God King (English) 1975 , மடொல் துவ (மடொல் மகள்) 1976, அகசின் பொலொவட்ட ( வானிலிருந்து நிலத்துக்கு ) 1978 , பின் ஹாமி ( புண்ணிய மனிதன்) 1979, வீர புரன் அப்பு 1979, பந்தேகம 1980, கலியுகய (கலியுக காலம்) 1982, யுகண்தய 1983, அவரகிரிய 1995, வாகன்தே வளவ்வ ( குளக்கரை வளவு) 2002 , அம்மாவருணே (அம்மாமாரே) 2006 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
Be Safe or Be Sorry-16 min, 1955 , Conquest in the dry Zone-14 min, 1954 , Soliloquy-12 min, 1951 , Farewell to Childhood-14 min, 1950 , A Sinhalese Dance-08 min, 1950 ஆகிய குறும்படங்களை இயக்கிய பின்னரே அவர் முழு நீளத் திரைப்படத் துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இலங்கை சிங்கள சினிமாவை தேசிய சினிமாவாக மாற்றிய பெருமை இவரையே சாரும். இவரது அநேக திரைப்படங்கள் பிரபல நாவல்களை தழுவியவையாகவே உருவாக்கப்பட்டன. இந்தியாவின் சத்யஜித் ரேக்கு ஒப்பாக இலங்கை சினிமைவை மேன்மைப்படுத்தி உலக சினிமா தரத்திலான யதார்த்த படைப்புகளை உருவாக்கி விருதுகளை வாங்கித் தந்த பெருமை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களையே சாரும்.
சரித்திரம் படைத்த ஒரு திரைச் சிற்பி இன்று மௌனித்து விட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்!
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய ஊமை இதயம் திரைப்படம் (சிங்களம்)
ගොළු හදවත 1968 Golu Hadawatha
https://youtu.be/UO9AotPBx6Y

கருத்துகள் இல்லை: