செவ்வாய், 1 மே, 2018

ஓடாத திருவாரூர் தேரை ... கலைஞர் தேரை மட்டும் ஓடவைக்கவில்லை


Muralidharan Pb : தேர் ஓட்டிய நார்த்திகர்!!!
'ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையடா தியாகேசா'
என்று 40களில் திராவிடர் கழகத்தில் இருந்த போது திராவிட பேச்சாளர் கருணாநிதி பேசியது.
அதே மு கருணாநிதி முறையே கூலி கிடைக்காத விவசாயிகளுக்காக, சட்ட மன்ற உறுப்பினராக கையேர் வாரம் மாட்டெர் வாரம் என்று ஆரம்பித்து தனது சட்டமன்ற முதனுரையை பொழிந்தார்.
கலைஞர் தேரை மட்டும் ஓடவைக்கவில்லை, கருணையின்றி சாட்டையால் அடிக்கப்பட்டு தேரை நகர்த்த துன்புறுத்தப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் ஒட்டுமொத்தமாக ஒளி ஏற்றினார் என்றால் அது மிகையாகாது.
அந்த தேரோட்டம் என்ற பெயரில் நடந்த அத்து மீறல் என்ன என்பதை அறிவோம். 300 டன் எடையுள்ள அந்த மிகப்பெரிய ஆழித்தேரை ஓட்டி வலம் வர செய்ய அன்று தேவைப்பட்ட காலம் 4 நாட்கள். அதுவும் எல்லா கோயில் நகரங்களிலும் நாம் காண்பது மாட வீதி, அதாவது தேரோட்டம் நடைபெரும் வீதிகள். ஆனால் சுமார் 10000 பேர் வடம் பிடித்தால் மட்டுமே நகரும். அங்கு மட்டுமே காணப்படுகின்ற வடம் தெருக்கள். விவசாயிகள் துன்புறுத்தப்பட்டு ஓடியது அந்த ஆழித்தேரின் வரலாறு. தேர் தெருவுக்குள் முறையே திரும்பாமல் செலுத்தப்பட்டால் அவர்களுக்கு சவுக்கடி விழும்.

நாத்திகம் பேசிய கம்யூனிஸட் கலைஞர் செய்த மாபெரும் பொதுவுடைமை என்ன தெரியுமா ? திருச்சி BHEL நிறுவனத்திடம் இருந்து ஹைட்ராலிக் பிரேக் செய்ய வைத்து, இரும்பினால் ஆனா ஒன்றரை ஆள் உயரம் கொண்ட ராட்சச சக்கரங்களை தாங்கிகள்(Bearings) கொண்டு இயங்க வைத்தார். அதற்கு முன்னர் தேரை மனிதன் இழுத்து சக்கரங்களுக்கு இடையே மாண்டு போனது எல்லாம் நடந்துள்ளது. இரும்பினால் ஆனா பெரிய வளைவான தகடுகளை வைத்து திருப்பிட செய்தனர். ஆனால் பின்னால் இருந்து புல்டவுஸர் வைத்து தள்ளினால் தேர் தென்றலாய் நகர்ந்து வலம் வரும்.
கிருத்துவ, இசுலாமிய பண்டிகைகளுக்கு பேரை குறிப்பிடும் அவர் பெயரில் நடக்கும் தொலைக்காட்சியில் இந்து பண்டிகைக்கு வெறும் விடுமுறை நாள் என்று அறிவிக்கப்படுகிறது, இந்து கடவுள்களை இழிவு படுத்தினார்,இந்து விரோதி என்று அர்ச்சிக்கப்படுகின்ற கலைஞர் தான் அன்று வெகு மக்கள் வணங்குகிற கோவில் தேரை மிகவும் நேர்த்தியான முறையில் ஓட வைத்தார்.
இதே வேறொரு அரசியல்தலைவராக இருந்தால் இந்தியா முழுவதும் இதையே ஒரு பாடமாக வரலாற்றில் 'அசோகர் மரம் நட்டார்' என்பது போல் இந்த தேர் ஓட்டிய பெருமை பேசி இருப்பார்கள். கலைஞர் எதிலுமே முன்னோடி. தற்பெருமைகளை எப்போதும் அவர் பேசுவதில்லை. தம்பட்டம் அடித்து கொள்வதும் இல்லை.
பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடங்குவோம்! அதே நேரத்தில் பக்தி பிரச்சாரத்தை தடுக்க மாட்டோம் என்று பெரியார் முன்னிலையில் இரண்டு நாட்கள் கழித்து பாராட்டு விழாவில் அவர் பேசியது வரலாறு. அதற்கு அரசு செய்தது 4 லட்ச ரூபாய். அதையும் அன்று கேலி பேசினார்கள். அதற்கும் அவரது பாணியிலேயே பேசினார்.
"நாலு நாள் ஓடும் தேருக்காக நாலு லட்சமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் தேர் நான்கு நாட்கள் தான் ஓடுகிறது. அதற்கு பிறகு மக்கள் தான் அந்த பாதையில் நடக்கிறார்கள். அரசை நடத்துபவர்களுக்கு இப்படி பட்ட சாதுரியங்கள் தேவை. நாளைக்கு போடக்கூடிய சாலையை இன்று தேர் ஓடுகிற நேரத்தில் போட்டால் பக்தர்களின் மனமும் பூரிக்கிறது.
அவர் சாலையை மட்டும் போடவில்லை மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பானா தேரையும் ஓட வைத்தார் என்பது சிறப்பு.
அதே கலைஞர் கருணாநிதி என்று முதல் அமைச்சர் தேர் ஓட வைத்த வரலாறு என்பதை விட ,3 லட்சம் கிலோ எடை கொண்ட அந்த ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேர் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த ஆழித்தேர் பகுத்தறிவு நார்த்திகம் பேசிவந்த கலைஞர் ஓட வைத்தது தான் சிறப்பான வரலாறு.
நன்றி : Govi Lenin திராவிடம் 2.0 பேச்சில் இருந்து

கருத்துகள் இல்லை: