
tamilthehindu :இரா.வினோத்
கடந்த 2015 ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி
ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு சென்றபோது எடுக்கப்பட்ட படம். -கோப்புப் படம் ரம்யா - K_MURALI_KUMAR
கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் பிரச்சார களத்தில் காங்கிரஸ், பாஜகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதேபோல ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காங்கிரஸ் சமூக வலைதள குழுவினருக்கும், பாஜக சமூக வலைதள குழுவினருக்கும் இடையே வார்த்தை போர் நடக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவரும், நடிகையுமான ரம்யா (எ) திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தின்போது அணிந்திருந்த கோட் ஒன்றின் விலையை கண்டுபிடித்து அவர் ட்விட் செய்துள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள கோட் மிகவும் ஃபேன்சியாக உள்ளது. உங்களது லோரோ பியானா ஜாக்கெட் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் விலை 17,000 யூரோ மட்டுமே. மிகவும் குறைவான விலை. சரி, யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். லோரோ பியானா ஆடையின் இந்திய மதிப்பு ரூ.13.6 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றார். அங்கு பெர்லின் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியபோது எடுக்கப்பட்ட படத்தை ரம்யா இப்போது வெளியிட்டுள்ளார். அப்போது பிரதமர் மோடி லோரோ பியானா கோட் அணிந்திருந்ததாக ரம்யா கூறியுள்ளார். <
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக