புதன், 2 மே, 2018

லட்சுமி மிட்டல் ஆ.ராசாவிடம் கார்த்திக் சிதம்பரம் சொலித்தான் பேசினார் ... 2ஜி அவிழும் உண்மைகள்

இந்தப் புத்தகத்தின் சிறப்பே இதில் ராசா உதாரணம் காட்டும், மேற்கோள் காட்டும் ஆளுமைகள் அனைவரும் இப்போது உயிரோடு இருப்பவர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார், 100 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்னார் என்று சொல்லாமல் லட்சுமி மிட்டல் என்னிடம் பேசினார், நிதிஅமைச்சரின் மகன் சொல்லிதான் என்னிடம் பேசினார். ‘காற்றுக்கு எதற்கு விலை வைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், பிரச்னை பண்ணாதீர்கள்’ என்று லட்சுமி மிட்டல் தன்னிடம் பேசியதாக ராசா பதிவு
மின்னம்பலம் : 2ஜி வழக்கில் விடுதலையான திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ஆ.ராசா 2ஜி வழக்கு பற்றிய உண்மைகளை ‘2ஜி சாகா அன்ஃபோல்டு’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி டெல்லியில் வெளியிட்டார். பின் இப்புத்தகத்தின் தமிழ் வடிவம், ‘2ஜி அவிழும் உண்மைகள்’ என்ற தலைப்பில் சென்னையில் வெளியிடப்பட்டது.
இதன் பின் இப்புத்தகத்தைப் பற்றிய ஆய்வங்கரத்தை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்த முடிவு செய்து முதல் ஆய்வரங்கம் திருச்சியில் நேற்று (மே 1) நடந்தது. கவிஞர் நந்தலாலா தலைமையிலான வானம் அமைப்புதான் இந்த நிகழ்வை நடத்தியது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த ஆய்வரங்கத்தில் இப்புத்தகத்தை வாசித்து முடித்த ஆளுமைகள் அதுபற்றி தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கவிஞர் நந்தலாலா தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சரும் திமுக திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு முன்னிலை வகிக்க, இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், திராவிடர் கழக பிரசார செயலாளரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அருள்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.


முன்னிலை வகித்த நேரு பேசுகையில், ‘எனக்கு பேசவெல்லாம் தெரியாது. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ராசாவை 2ஜி வழக்கில் சிக்க வைத்து திமுகவை பல நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். இந்த வழக்கில் வென்று தன்னை நிரபராதி என்று நிரூபித்துள்ளார் ராசா. இந்த உண்மையை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முதல் வேலையை முன்னெடுத்திருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்’’ என்று முடித்துக் கொண்டார்.
அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள்
திராவிடர் கழக பிரசாரச் செயலாளரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அருள்மொழி பேசுகையில் இப்புத்தகத்தின் முக்கியமான சிறப்பு அம்சத்தை எடுத்துக் காட்டினார்.
“இந்தப் புத்தகத்தின் சிறப்பே இதில் ராசா உதாரணம் காட்டும், மேற்கோள் காட்டும் ஆளுமைகள் அனைவரும் இப்போது உயிரோடு இருப்பவர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார், 100 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்னார் என்று சொல்லாமல் லட்சுமி மிட்டல் என்னிடம் பேசினார், நிதிஅமைச்சரின் மகன் சொல்லிதான் என்னிடம் பேசினார். ‘காற்றுக்கு எதற்கு விலை வைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், பிரச்னை பண்ணாதீர்கள்’ என்று லட்சுமி மிட்டல் தன்னிடம் பேசியதாக ராசா பதிவு செய்கிறார்.
இந்த புத்தகத்தில் ராசா குறிப்பிட்டவர்கள் எல்லாரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சந்தேகம் இருப்பவர்கள் அவர்களிடம் போய் தீர்த்துக் கொள்ளுங்கள். உலக வரலாற்றில் இதுபோன்ற ஒரு புத்தகமில்லை’’ என்று குறிப்பிட்டார்.
எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்
திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் தன்னுடைய இயல்பான நடையில் ஆரம்பித்து ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தார்.
“நான் இந்த புத்தகத்தை வாங்குகிறபோது இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இதை வாசித்தபிறகுதான் இதன் கன பரிமாணத்தை உணர்ந்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற வெளிநாட்டு அறிஞர்களின் பெயர் மட்டுமே நூற்றுக் கணக்கானவை. வெளிநாட்டு சட்டப் புத்தகங்கள், சட்ட நிபுணர்களின் ரெஃபரென்ஸ் மட்டுமே 50 க்கு மேல் இருக்கிறது. இதைப்படித்த பிறகுதான் உங்களின் வீச்சையும், வீரியத்தையும் உணர முடிகிறது.
அவர்கள் எதற்காக உங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள் என்பதில் உள்ள நியாயத்தை நான் கண்டுகொண்டேன். இவரை இப்படியே வளரவிட்டால் இரண்டாம் பெரியாராக வந்துவிடுவார் என்ற பயம், தான் அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது.
உங்களிடத்தில் தான் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் தவறில்லை. நீங்கள் உங்கள் சுய சரியதை எழுதுங்கள். எங்களுக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கும். உங்கள் புத்தகம் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல இருக்கிறது. தயவு செய்து இந்தப் புத்தகத்தோடு எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
என் மகள் என்ன தவறு செய்தார்?
ஏற்புரையை இந்த நிகழ்வில் பெருமித உரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி நிறைவாக பேச வந்தார் ஆ.ராசா.
”கலைஞரும் திமுகவும் இல்லை என்றால் நான் என்றோ இறந்துவிட்டிருப்பேன். ராஜா இருந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். என்னை இந்த இடத்தில் நிலை நிறுத்திய என் தலைவர் கலைஞரை இங்கிருந்தே வணங்குகிறேன்’’ என்று தொடங்கினார். அவரது உரையில் உருக்கமும் கோபமும் கலந்திருந்தது.

”ராசா தவறு செய்தார் உங்கள் பார்வையில். சரி, ராஜா மனைவி என்ன தவறு செய்தார்? ராஜாவின் ஏழு வயது மகள் என்ன தவறு செய்தார்? நான் அரங்கத்துக்குள் வரும்போதே அமைச்சர் , (நேருவைதான் அமைச்சர் என்று குறிப்பிடுகிறார்) ‘ஜூனியர் விகடன் நிருபர் வந்திருக்கிறார்’ என்று சொன்னார்.
அந்த நிருபர் மூலமாக நான் அவர் முதலாளியிடம் ஒன்றை சொல்லச் சொல்கிறேன்.
என் படத்தோடு எனது ஏழு வயது மகள் படத்தையும், என் மனைவி படத்தையும், போட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் என்று அட்டைப் படம் போட்டாயே... நான் நிரபராதி என்று வெளியே வந்துவிட்டேன். ஒரு மறுப்பாவது எழுதினாயா? பணம் அதிகமாக இருக்கும் குடும்பம் என்று யாராவது என் குழந்தையை கடத்திக் கொண்டு போய்விட்டால் நீ மீட்டுக் கொடுப்பாயா?
ஏனென்றால் ஆனந்த விகடன்... அவாள் விகடன். அவர்கள் அப்படித்தான். சிறையில் இருக்கும்போதே என்னிடம் அந்த இதழை கொடுத்தார் என் நண்பர். (கூட்டத்தில் உட்கார்ந்திருந்த அந்த வழக்கறிஞர் நண்பரை கையால் சுட்டிக்காட்டினார் ராசா) ‘ இந்த நாயை செருப்பால் அடிக்கவேண்டும்’ என்று அந்த அட்டைப்படத்திலேயே எழுதினேன். அது இன்னும் இருக்கிறது என்னிடம். அந்த புத்தகத்தை நினைவாக அப்படியே வைத்திருக்கிறேன்.
வழக்கில் வெற்றி பெற்று நான் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருகிறபோது தளபதி என்னை அழைத்து, ‘என்னதான் இருந்தாலும் அவர் உங்களுக்கு பிரதமராக இருந்தவர். அவரை சந்தித்துவிட்டு வாருங்கள்’ என்றார். அதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை சென்று பார்த்தேன்.
என்னை முதுகில் மூன்று முறை தட்டிக் கொடுத்தவர். என் முகத்தைப் பார்த்தபோது சொன்னேன், ‘2ஜி விவகாரம் என் ஒருவனோடு முடிந்துவிடும் என்று என்னை கழற்றிவிட்டீர்கள். நான் அப்போதே சொன்னேன். இது என்னோடு முடிந்துபோகாது. உங்களையும் காவு வாங்கும் என்று சொன்னேன். அதுதான் நடந்தது. மத்தியிலே நீங்கள் ஆட்சியை பறிகொடுத்துவிட்டீர்கள்.
மத்தியில் ஆட்சி போனால் கூட பரவாயில்லை. ஒரு பாவமும் அறியாத என் இயக்கம் தமிழகத்திலே ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டதே... அதுதான் எனக்கு ரண வேதனையை ஏற்படுத்துகிறது’ என்று சொன்னேன்.
அப்போது மன்மோகன் சிங் என்னைப் பார்த்து, ‘மன்னித்துக் கொள்ளுங்கள்... மன்னித்துக் கொள்ளுங்கள்... மன்னித்துக் கொள்ளுங்கள் ’என்று மூன்று முறை என்னிடம் மன்னிப்பு கேட்டார்’’ என்றவர் அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார்.

கருத்துகள் இல்லை: