புதன், 2 மே, 2018

நீதிபதி ஜோசப் நியமனத்தை சட்ட அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை .. கொலீஜியம் இன்று கூடுகிறது

தினமலர் :"நீதிபதி, ஜோசப், நியமன, விவகாரம், கொலீஜியம், இன்று, கூடுகிறது" புதுடில்லி : உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். இதை மத்திய அரசு பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பது, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஜன 10-ம் தேதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப், மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இரண்டு பேரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதில் , இந்து மல்ஹோத்ராவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, மத்திய சட்ட அமைச்ச கம், ஏற்கனவே ஒப்புதல் அளித்தது; ஜோசப்பை நியமிக்க ஒப்புதல் அளிக்கவில்லை; இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக இன்று கொலீஜியம் கூடி ஜோசப் நியமனம் தொடர்பாக முடிவு எடுக்க உள்ளது.

கருத்துகள் இல்லை: