செவ்வாய், 1 மே, 2018

வட கொரியா எல்லையில் பிரசார ஒலிப்பெருக்கியை அகற்றுகிறது தென் கொரியா

BBC : வடகொரியாவுடனான தனது எல்லைப் பகுதியில் தான் வைத்த பிரசார ஒலி
பெருக்கிகளை அகற்றத் துவங்கியிருக்கிறது தென் கொரியா. வடகொரியாவும் இதே போல தம் தரப்பில் வைத்த பிரசார ஒலி பெருக்கிகளை வட கொரியாவும் அகற்றிக் கொண்டிருப்பதாக தாம் நினைப்பதாக தென் கொரியா கூறியுள்ளது."> >பகைமையில் இருந்த இந்த இரு நாடுகளும் பரஸ்பரம் இன்னொரு நாட்டு மக்களிடையே தம் கருத்தைப் பரப்பும் நோக்கில் தங்கள் எல்லைப் புறத்தில் பெரிய ஒலிபெருக்கிகளை நிறுவி பிரசாரம் செய்துவந்தன.
கடந்த வாரம் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொரிய உச்சி மாநாட்டுக்கு பிறகு உறவு வலுப்பெறுவதன் குறியீடாக இந்த ஒலிபெருக்கிகளை அகற்றத் துவங்கியுள்ளது தென்கொரியா.
வெள்ளிக்கிழமையன்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. மேலும் கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற இடமாக மாற்றுவதற்கான பணியில் ஈடுபட ஒப்புக்கொண்டுள்ளன.

அணுசக்தி விவகாரங்கள் குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்- உன் இன்னும் சில வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியா முதன்முதலாக 1960களில் இந்த ஒலிபெருக்கியை நிறுவியது. அப்போதிலிருந்து கொரியன் பாப் இசை முதல் செய்தி அறிக்கைகள் வரை பலவற்றை எல்லையில் ஒலிபரப்பிவந்தது. பெரும்பாலும் ராணுவ வீரர்களை குறிவைத்தது, வட கொரிய தலைமை மீது அவர்கள் சந்தேக்கப்படவைக்க இவை உதவும் என தென்கொரியா நம்பியது.
தன்னிடம் எத்தனை ஒலிபெருக்கிகள் இருக்கின்றன, அவை எங்கு இருக்கின்றன என்பதை சோல் உறுதிப்படுத்தவில்லை. வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரு நாடுகளும் தங்களது ஒலிபரப்பை நிறுத்திவிட்டன.
செவ்வாய்கிழமையன்று தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், நண்பகல் வேளையில் ஒலிபெருக்கிகளை அகற்றத்துவங்கியதாக தெரிவித்துள்ளது.
வட கொரியாவும் ஒலிபெருக்கிகளை அகற்றிவருவதாக தென் கொரியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை கட்டமைக்கும் விதமாக ஒலிப்பெருக்கியை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தென்கொரியா விவரித்துள்ளது.
வடகொரியாவுக்கு துண்டுப் பிரசுரங்களை அனுப்பும் தனியார் நிறுவனங்களை அவற்றை நிறுத்துமாறு தென் கொரிய அரசு கேட்டுக்கொண்டது. ஏனெனில் இந்தப் பிரசுரங்களை ஆத்திரமூட்டும் செயலாகப் பார்க்கிறது வடகொரியா. உச்சிமாநாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவை என தென் கொரியா கேட்டுக்கொண்டது. r /> பத்தாண்டுகளுக்கும் அதிகமான கால இடைவெளிக்குப் பிறகு, இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான உச்சிமாநாட்டில் இரு கொரியத் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். தென் கொரிய அதிபர் முன் ஜே - இன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கொரிய உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
  • அணுசக்தியற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் செயலில் அர்ப்பணித்துக்கொள்ளுதல்.
  • ராணுவமயமற்ற மண்டலத்தை அமைதி மண்டலமாக மாற்றுதல் மேலும் பிரசார ஒலிபரப்பை நிறுத்துதல்.
  • இம்மண்டலத்தில் ஆயுதங்களை குறைத்து ராணுவ பதற்றத்தை குறைத்தல்.
  • போரால் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைய ஏற்பாடு செய்தல்.
  • எல்லையில் உள்ள சாலைகளை இணைத்து ரயில்வேயை நவீனமயமாக்குதல்.
  • இந்த ஆண்டு நடக்கும் ஆசிய போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளில் தொடர்ந்து இரு நாடுகளும் கூட்டாகப் பங்கேற்றல்.

அதிபர் கிம் ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வடகொரியா மற்றும் தென் கொரியாவின் தற்போதைய அதிபர்களுக்கு இடையான முதல் சந்திப்பாக இருக்கும்.
இதுவரை தேதி, நிகழ்ச்சி நிரல், இடம் என எதுவும் முடிவாகவில்லை. மங்கோலியா அல்லது சிங்கப்பூர் ஆகியவை நிகழ்ச்சியை நடத்தும் நாடுகளாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது

கருத்துகள் இல்லை: