Swathi K :
2014 தேர்தலில் ஐ.டி துறையில் மோடிக்கு ஆதரவளித்த கூட்டம்
இன்றும் அப்படியே தான் இருக்கிறது. 2019 தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொருவரின் அடிமனதிலும் இருக்கும் மத ஜாதி வெறி அப்பட்டமாய் வெளியே வருகிறது.
மோடியும் பிஜேபியும் காட்டிய வளர்ச்சி என்பது பொய். அது போல் இவர்கள் வளர்ச்சிக்காக மோடியையும் பிஜேபியையும் ஆதரித்தார்கள் என்பதுவும் பொய். இவர்கள் தங்கள் உள்மனதில் இருக்கும் சாதி மற்றும் மத வன்மம் காரணமாகவே
பிஜேபியையும் மோடியையும் ஆதரித்தார்கள் என்பதுவே உண்மை.
பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் போடும் மீமீஸ்களை கொண்டு தான் அரசியல் மற்றும் பொது அறிவு விஷயங்களை இவர்கள் பெறுவதால் பிஜேபி மிக எளிதாக தன் விஷத்தை இவர்கள் மீது மேலும் மேலும் செலுத்துகிறது.
பிஜேபியால் விஷம் ஏறப்பெற்ற இவர்களின் பாசிசம் அதிகரித்து கொண்டே செல்கிறது. திரிபுரா முதல்வருக்கு பக்தர்களாக மாறும் அளவிற்கு இவர்களின் பாசிச வெறி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஒருவரிடம் யாருக்கு ஒட்டு போடுவாய் என்றேன், அவர் பிஜேபிக்கு தான் போடுவேன் என்றார், என்ன காரணம் என்று கேட்டேன், அதற்கு அவர் ஒர் மீமீஸை என்னிடம் காட்டினார், அது ராகுல்காந்தி இந்துக்களுக்கு எதிராக பேசியதாக ஒர் மீமீஸ். இது ஆர்.எஸ்.எஸ் கும்பல் போட்ட பொய் மீமீஸ்.
ஆனால் இதனை உண்மை என்று நம்பி பிஜேபி தூண்டி விட்ட மதவெறியை தன் மனதில் ஏற்றியிருக்கிறார். இந்த செய்தி பொய் என்பதை நான் அவரிடம் ஆதரப்பூர்வமாக காட்டினாலும், அவர் பிஜேபி போட்ட வேறு பல பொய்யான மீமீஸ்களை காட்டி கொண்டு "ராகுல்காந்தியும் சித்தராமைய்யாவும் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறார்கள்" என்று கூறிகொண்டே இருந்தார்.
பிஜேபி இவர்களிடம் புகுத்திய சாதி மற்றும் மத பாசிச வெறி இவர்களை என்றுமே பிஜேபியின் ஆதரவாளர்களாகத் தான் வைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக