புதன், 4 ஏப்ரல், 2018

NoIPLTamilNadu ,, ஐ.பி.எல். கூடாது:.. காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை . போர்க்கொடி !

BBC :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிரெண்டாகி வருகிறது. சமூக ஊடகங்களில் இதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தால் சேப்பாக்கம் மைதானம் காலியாக இருக்கும் என்றும், தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு காரணம் தெரிய வந்தால் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் இப்பிரச்சனை சின்ன தியாகத்தால் சென்று சேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார். e>ஒரு ஐம்பதாயிரம் பேர் செய்யக்கூடிய இந்த தியாகத்தால் ஏழு கோடி பேர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், இது மொழிப்பிரச்சனை அல்ல வாழ்வுப் பிரச்சனை என்றும், விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழகத்தில் மக்கள் உணர்வோடு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் சொந்த பணத்தில் டிக்கெட்டை பெற்று மைதானத்திற்குள் சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.


டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி, சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்றும், மீறி அங்கு விளையாட வரும் வீரர்களை சிறைபிடிக்கப்போவதாகவும் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
ஒரு புறம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், இதற்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். re>ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடைவிதிப்பதால் காவிரிப் பிரச்சனை எப்படி தீரும் என்று கேட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் #NoIPLTamilNadu ஹேஷ்டேக்கிற்கு எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: