புதன், 4 ஏப்ரல், 2018

வன்கொடுமை சட்டத்தை செயலிழக்க வைத்த உச்சி குடுமி நீதிமன்ற தீர்ப்பு


பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளது சமீபத்திய உ நீ மன்றத் தீர்ப்பு
அதாவது
= புகாரின் அடிப்படையில் கைது என்பது கட்டாயமல்ல
= குற்றம் சுமத்தப்படுமுன் அரசு ஊழியர்கள் என்றால் தலைமை அதிகாரிகளின் முன்னனுமதியோ, பொது மக்களாக இருந்தால் அந்தப் பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் முன்னனுமதியோ பெற்றபின்னரே புகார் அளிக்க முடியும்
இப்படி ஒரு தீர்ப்பு ஏனென்றால் அப்பாவி சாதியவாதி ஒரு குற்றமும் செய்யாமல் பாதிக்கப்படக் கூடாது.
ஆஹா, என்னே நீதிபதிகளின் கருணை!

இந்தச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் உரிய நிவாரணம் பெற்றவர்கள் வெறும் பத்து சதவீத்துக்குக் கீழ்தான்
மற்றவை-
சாட்சி இல்லை,
குற்றம் சுமத்தப்பட்ட நபர் காணவில்லை

என்று தள்ளுபடி செய்ததும் கிடப்பில் போட்டதுமாக உள்ளன. இவையெல்லாம் காவல்துறையினரின் சாதியப் பார்வை, ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு மற்றும் தலித் மக்கள் மீதான வெறுப்பு அன்றி வேறெதுவும் இல்லை.
இப்படியிருக்க உ நீ மன்றத்தின் தீர்ப்பு எப்படி யிருக்கிறதென்றால்....
எப்படி, மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மத நல்லிணக்கத்துக்குப் பெரும் குந்தகம் ஏற்பட்டுள்ளதோ அதேபோல சாதி வெறியர்களுக்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.
வட நாட்டில் இத்தீர்ப்பை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன காரணம், அங்கு தலித் மக்களின் பாதிப்பு அதிகம். இச்சட்டம் அவர்களுக்கு எறும்புக்குக் கிடைத்த ஒரு சின்னத் துரும்பாக உள்ளது. இப்போது அதுவும் செயலற்று விட்டால் அவர்களின் நிலை என்ன?
முன்விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தாலே இதில் கைது மற்றும் மேல் நடவடிக்கை என்றால் காவல்துறையினர் நேர்மையாளர்களாக இருந்தாலொழிய எந்தப் புகாரும் பதிவாகாது. இதுவரை உள்ள நிலையைப் பார்க்கும்போதே காவல்துறையினரின் சிரத்தையின்மையும் சாதிய மனப்பாங்குமே பாதிக்கப்பட்ட தலித்களுக்கு இச் சட்டத்தால் போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதாகும்.
இதைப்பற்றி நன்கு அறிந்த நீதியரசர்கள் வாய்ப்பாகக் கிடைத்த வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது அவர்களின் சாதிய மனப்பான்மையையே காட்டுகிறது.
தலித் மக்களின் தீவிரப் போராட்டத்துக்குப் பின்னும்
அழுத்தம் காரணமாக மத்திய அரசு மறு சீராய்வு மனு கொடுத்தபோது
அத்தீர்ப்புக்குத் தடை விதிக்க உ நீ மன்றம் மறுத்துவிட்டது ஏனென்றால் அப்பாவி சாதி இந்துவின் தன்னைக் காத்துக் கொள்வதற்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறதாம். அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று உ நீ மன்றத்தில் புள்ளிவிவரம் உள்ளதா?
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (நீதிகள்)  dhakshninamoorthi

கருத்துகள் இல்லை: