தினமலர்: ஐதராபாத் : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை
கண்டித்து, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து, எம்.பி.,க்கள், தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்."ஜெகன்,ஜெகன் கட்சி,எம்.பி.,ராஜினாமா,
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி, கோரிக்கை வைக்கப்பட்டது. இதை, மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து, தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் விலகியது. பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரில், ஆந்திர, எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், 23 நாட்கள், இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து எம்.பி.,க்கள், தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.< தங்கள் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்கினர். இதன்பின், பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டில்லியில் உள்ள ஆந்திரா பவனில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
''தெலுங்கு தேசம், எம்.பி.,க்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, ஆந்திராவுக்கு< சிறப்பு அந்தஸ்து பெற்றுதர, மக்களுடன் இணைந்து போராட வேண்டும்,'' என, ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபைக்கு, நேற்று சைக்கிள் ஊர்வலம் சென்றனர். ஜனசேனா கட்சி தலைவரும், தெலுங்கு நடிகருமான, பவன் கல்யாண், இடதுசாரிகளுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் நடை பயணத்தை துவங்கியுள்ளார்.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக