திங்கள், 2 ஏப்ரல், 2018

அதிமுக எம்பி முத்துகருப்பன் ராஜினாமா செய்ய மாட்டாராம் ... முதல்வர் விரும்பல்லியாம்

அ.தி.மு.க. எம்.பி. பதவி - முத்துக்கருப்பன் ராஜினாமா முடிவில் திடீர் மாற்றம்மாலைமலர்: காவிரி விவகாரத்திற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்த முத்துக்கருப்பன் எம்.பி. இன்று அதனை மாநிலங்களவை தலைவரிடம் நேரில் கொடுக்கவில்லை. புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய போவதாக அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் தெரிவித்து இருந்தார். அதன்படி முத்துக்கருப்பன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக இன்று காலை அறிவித்தார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.  அதன்படி அவர் இன்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. < இந்த நிலையில் ராஜினாமா செய்யும் முடிவில் முத்துக்கருப்பனுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதால் அவர் இன்று ராஜினாமா செய்யவில்லை.


இது தொடர்பாக முத்துக்கருப்பன் கூறியதாவது:-< இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்க முடியவில்லை. இதனால்  ராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை. நாளை ராஜினாமா கடிதத்தை அளிக்க முயற்சி செய்வேன்.

ராஜினாமா செய்ய வேண்டாம் என முதலமைச்சர், துணை முதலமைச்சர், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். உச்சநீதிமன்ற உத்தரவு வரும் வரை பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என  முதலமைச்சர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி விவகாரத்தில் ராஜினாமா செய்வது தீர்வாகாது என்றும், முத்துக்கருப்பன் எம்.பி.யின் ராஜினாமா முடிவு, அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: