ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கமலஹாசன் : ஸ்டெர்லைட் முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு ரூ.8000 கோடி லஞ்சம் !

Lakshmi Priya - Oneindia Tamil தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அரசியல்வாதிகளுக்கு அந்த ஆலையின் உரிமையாளர்கள் ரூ.8000 கோடி லஞ்சம் கொடுத்ததாக கமல்ஹாசன் பகீர் புகாரை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இது விரிவாக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த ஆலையால் தோல் நோய், சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படுவதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை கண்டித்து கடந்த 49 நாட்களாக குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி வாழ் தமிழர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கமல் சந்திப்பு கமல் சந்திப்பு இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் அழைத்தால் பங்கேற்பேன் என்று கமல் ஏற்கெனவே கூறியிருந்தார். இதையடுத்து அந்த போராட்டக் குழுவினர் கமலை சந்தித்து அழைப்பு விடுத்தனர். சிறிது நேரம் சிறிது நேரம் அதன்பேரில் அவர் இன்று போராட்ட களத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு விடுத்து அதன்படி கலந்து கொண்டார்.
அந்த போராட்டத்தில் மக்களுடன் மக்களாக கமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். தனிமனிதன் தனிமனிதன் பின்னர் அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், நான் நடிகன் என்பதை காட்டிலும் மனிதன். எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே இங்கு வந்துள்ளேன். 
நீங்கள் சுவாசித்த இந்த வேப்பமரக் காற்று எனக்கு புத்துணர்வை கொடுக்கிறது. நான் இங்கு போட்டோ எடுக்க வந்ததாக சிலர் கூறுகின்றனர். நான் அதற்காக இங்கு வரவில்லை. லஞ்ச புகார் மேலும் என்னை வைத்து படமே எடுத்துவிட்டார்கள். அதுபோல் நான் ஓட்டுக்காக குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்கவில்லை. தனி மனிதனாகவே வந்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலை வியாபார பேராசையின் கோர முகம். தொழிற்சாலை நடத்துபவர்கள் அரசியல்வாதிகளுக்கு ரூ.8000 கோடி லஞ்சம் கொடுத்துவிட்டதாக தகவல்கள் எனக்கு வந்துள்ளன என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: