Shyamsundar - Oneindia Tamil
சென்னை: காவிரி போராட்டத்தில் தமிழகம் முழுக்க கைதான 85,000 பேர் விடுதலை
செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு
மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக்
கண்டித்து இன்று தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம்
நடைபெற்றுள்ளது.
திமுக அழைப்பு விடுத்து இருந்த இந்த போராட்டத்தில் அனைத்து
எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டது. சென்னை தொடங்கி குமரி வரை போராட்டம்
நடந்தது. கட்சி சாராத பொதுமக்களும் அங்காங்கே இந்த போராட்டத்தில் கலந்து
கொண்டார்கள்.
இந்த நிலையில் காலையில் போராட்டம் நடத்திய போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக
தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பின் சில மணி நேரம் கழித்து அவர்கள்
விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதேபோல் தமிழகம் முழுக்க 10,000 பெண்கள் உட்பட 85,000 பேர் கைது
செய்யப்பட்டனர். இதில் நிறைய கல்லூரி மாணவ, மாணவிகளும் அடக்கம்.
தற்போது இந்த 85,000 பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள்
மீது வழக்கு எதுவும் போடப்படவில்லை. காவிரி போராட்டத்த்தில் மொத்தம் 41
பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்து
இருக்கிறது.
இந்த போராட்டத்தில் பெரிய அளவில் வேறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக