கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை
இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பிரதமருக்கு எதிராக மகிந்தாவின் கட்சியும் அதிபர் மைத்திரிபாலாவும் கூட்டாக இந்த தீர்மானத்தை கொண்டுவந்தனர். அதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த மாதம் 21ம் திகதி சபாநாயகரிடம் தரப்பட்டது. அதன்மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
திரு.சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் மலையக தமிழ் எம்பிக்களும் இஸ்லாமிய எம்பிக்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக