செவ்வாய், 3 ஏப்ரல், 2018

எஸ்.சி எஸ்டி தாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் வன்கொடுமை சட்டம் சிதைக்கப்படுகிறது


dinakaran :புதுடெல்லி  : தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சட்டம் அதன் மூலதாரம், நோக்கம் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தின் கீழ் உடனடியாக குற்ற வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்தது. இந்த உத்தரவு 1989ம் ஆண்டின் எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போக செய்துவிடும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதை சீராய்வு செய்யக் கோரி மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், எஸ்.சி, எஸ்டி சட்டம் அதன் மூல நோக்கம் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட  வேண்டும் என கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தலித் பிரிவினருக்கு ஆம் ஆத்மி அனைத்து ஆதரவையும் தரும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில், ‘எஸ்சி/எஸ்டி சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஆம் ஆத்மி துணை நிற்கும். மத்திய அரசு சட்ட நிபுணர்களை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். எஸ்.சி, எஸ்டி சமுகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். டெல்லி சட்டப் பேரவையில் இது குறித்து  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி மட்டுமின்றி எதிர்க்கட்சி பாஜ உறுப்பினர்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தனர்’’ , இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: