செவ்வாய், 3 ஏப்ரல், 2018

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதம்.. இடைவேளைகளில் உணவு .. துள்ளுவதோ இளமை...

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதம் - சென்னை போராட்டத்தில் முதல்வர்-துணை முதல்வர் பங்கேற்புமாலைமலர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும்
போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை
முதல்வர் பங்கேற்றுள்ளனர். சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.< இதற்கிடையே,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.


அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்  தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது

கருத்துகள் இல்லை: