Eniyan Ramamoorthy :
அதிகாலை 4.30 முதல் இந்தக் காணொளியை சிறிது சிறிதாகத் துவங்கி மொத்தமாக 2 முறை பார்த்துவிட்டேன்.
இந்தியா டுடே பத்திரிக்கை சார்பாக கர்நாடகா பஞ்சாயத் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாத நிகழ்வு. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு.

இதில் பிரகாஷ் ராஜ் மற்றும் குஷ்பூவின் உரைகள் மீதுதான் கவனம் செலுத்த
வேண்டும். அதேநேரம் மாளவிகா மற்றும் பாபுல் உரைகள் மற்றும் உடல்மொழி,
வார்த்தைகள் மீதுத் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
மாளவிகா பி.ஜே.பி பிரதிநிதியாக களமிறங்கி போகிறப் போக்கில் ஹிந்துத்துவா மற்றும் ஹிந்து என்பது பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தயக் கலாச்சாரம் என்கிறார். உலகில் பிறக்கும் போது அனைவரும் ஹிந்துதான் பிறகுதான் மற்றவர்களாக மாறுகிறார்கள் என்கிறார். பசுவதை மற்றும் மாட்டு அரசியலால் நடைபெறும் கொலைகள் பற்றிய உரையாடலில் காந்தியை உள்ளே இழுத்து மடைமாற்றம் செய்கிறார். அப்போது நெறியாளுனர் தடுத்து காந்தியின் வார்த்தையாலே மூக்குடைத்து தயவு செய்து படித்துவிட்டு வாருங்கள் எனச் சொல்லி த்தூ வெனத் துப்பாதக் குறையாக அடுத்த நபரிடம் செல்கிறார்.
பாபுல் நடப்பு அரசாங்கத்தின் மத்திய மந்திரி. வழக்கம் போல் பி.ஜே.பி சொம்பு. குஜராத் சோம்பு. பிரகாஷ் ராஜ் எடுத்து முன் வைக்கும் எளிய மானுட கேள்விகளுக்கு நீங்கள் ஒரு அரைவேக்காடுன்னு சொல்கிறார். அதை அவரும் சிரித்துக் கொண்டே எதிர்கொள்கிறார். நெறியாளுனர் கேட்கும் ஒரு உணர்வு ரீதியான கேள்விக்கு பதில் மழும்பி தப்பிக்கிறார்.
இறுதியில் நிகழ்வு முடியும் தருவாயில் பிராகாஷ் ராஜ் பி.ஜே.பி நபர்களிடம் இருக்கும் பிரச்சனையாக வாசிப்பதில்லை, கேட்பதில்லை, பகுப்பாய்வு செய்வதில்லை ஆனால் பேசும் சத்தமிட மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிறார். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய உண்மையிது.
மேலும் குஷ்பு பேசுகையில் இருமுறை இந்நிகழ்விற்கு காங்கிரஸ் ஆளு என்பதை விட ஒரு பெண்ணாக பேசுகிறேன் எனப் பதிவு பண்ணியும் காங்கிரஸ் என்ற வட்டத்திலேயே உட்கார வைக்க முயற்சிக்கிறார் மாளவிகா. இறுதியில் நிகழ்வுக்கு தொடர்பே இல்லதா முத்தலாக் பற்றி கேள்வி கேட்டு அதில் தன்னோட நிலைப்பாட்டை குஷ்பு சொன்னவுடன் மாளவிகாவும், பாபுலும் இணைந்தப் படி இதே வார்த்தையை ராகுலிடம் சொல்லுங்கள் என்கிறார்கள்.
நிகழ்வு முழுக்க பிராகாஷ் ராஜ் மற்றும் குஷ்புவிடமிருந்த பொறுமையான உடல்மொழியும் தெளிவான வார்த்தைகளும் மற்ற இருவரிடமும் இல்லை.
ஒட்டுமொத்தமாக நிகழ்வைப் பார்க்கும் போது கர்நாடகாவில் பி.ஜே.பி மிகத் தீவிரமான ஒற்றை கலாச்சாரத்தை புகுத்திடத் தீவிர செயல்வடிவங்களில் இருக்கிறது என நன்கு உணரமுடிகிறது. இத்தனை ஆண்டுகாலம் பி.ஜே.பி அங்கு மாறிமாறி ஆட்சி செய்திருந்தாலும் இம்முறை அவர்களது பாய்ச்சல் வேறு விதமாகத்தான் இருக்கும். காரணம் தமிழ்நாட்டில் வாங்கும் அடிகளை குறைக்க ஒரு அண்டைமாநில வெற்றி அவர்களுக்கு தேவைப்படுகிறது.
மேலும் இந்நிகழ்வின் முக்கிய சிறப்பு என்னவென்றால் பங்குபெற்ற அனைவரும் சினிமாவில் இருந்து அரசியல் வாழ்வுக்கு சென்றவர்கள். இதுபோன்ற நிகழ்வு ஒன்றை தமிழ்நாட்டில் கட்டமைத்து சினிமா அரசியல் பிரபலங்களை அழைத்து பேசவைத்தால் எப்படியிருக்குமுன்னு யோசித்தால் குபீர்ன்னு சிரிப்பு வருது.
அது ஒருபக்கம் இருக்கட்டும். பிரகாஷ் ராஜ் மற்றும் குஷ்பு பேசுகிற தைரியமான அரசியல் புரிதல் கூட நம்மூர் மய்யத்துக்கும், ஆன்மீகத்துக்கும்(ரெண்டு ஒன்னுதான்) இல்லையே. இருக்கப் போவதுமில்லை.
அவசியம் இக்காணொளியை பாருங்கள் எனச் சொல்லிக்கொண்டு.
#இனியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக