மின்னம்பலம்: நியாயமான
போராட்டங்களை ஒடுக்கவேண்டும்
என்ற எண்ணம் அரசுக்கு இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என அரசு தடை விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம்தான் தடை விதித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள், மாணவ அமைப்பினர், அரசியல்
கட்சியினர் உட்பட பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார், இன்று யாரும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்காக மெரினாவில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று(ஏப்ரல் 1) செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல. அதுவும் காவிரி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு மூன்று மாதம் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை. மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் தான் தடைவிதித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினால் அதற்கு அரசே பாதுகாப்புத் தரும்.
ஜெயலலிதா ஆட்சியிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுத்தது. ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் தற்போதைய அரசுக்கு இல்லை. ஸ்டெர்லைட் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் விவரம் தெரியாமல் தமிழக அரசு அமைதி காப்பதாக ரஜினி பேசக்கூடாது. அரசின் அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு நாளை அவர் பதில் சொல்லட்டும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக