மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
மதுரையில் பேட்டியளித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரிடம்
குறைகளை விசாரணை கமிஷன் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விசாரணை கமிஷன் நீதிபதி மதுரைக்கு வரவில்லை என முகிலன்
குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதி ராஜேஸ்வரன் முறையாக நடத்தவி்ல்லை என புகார்
தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
குறைகளை நீதிபதி கேட்வில்லை. விசாரணை நீதிபதி மதுரை, கோவை என எங்கும்
செல்லவில்லை என முகிலன் பேட்டியளித்துள்ளார்.
முழுமையான விசாரணை நடத்தாமலேயே விசாரணை கமிஷன் ஆயுட்காலம் முடிகிறது. விசாரணை கமிஷனின் ஆயுட்காலத்தை நீட்டித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என முகிலன் கோரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் பேட்டியளித்துள்ளனர். தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக