கீழடி அகழ்வாராய்வு
பணியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக
கருப்பு கொடி காட்டி மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் முன்னாள்
எம்எல்ஏவுமான முருகவேல்ராஜன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டன
கோஷம் செய்தனர்.
ஆனால் அவர்கள் கோஷம் போட்டதைப் பார்த்ததும், பாஜக
மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் வந்த 100க்கும்
மேற்பட்டவர்கள், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கல் வீசி தாக்குதலில்
ஈடுபட்டனர். போலீசார், முருகவேல்ராஜன் தலைமையில் வந்தவர்களை அங்கிருந்து
அப்புறப்படுத்துவதாக கூறி கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள்
மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுத்துள்ளதாக மு.ருகவேல்ராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் இயக்கங்கள் சொல்லும் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகள்
அனைத்தும் தவறானது என்றும் “அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார்.
மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்” என்று கூறினார்.
அதே போல அமர்நாத் இடத்திற்கு இன்னொருவரை போட்டிருப்பதாகவும், அவர் தமிழை ஓரளவு புரிந்து கொள்வார் என்றும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேசுவதையே ஓரளவிற்குத்தான் ஒருவரால் புரிந்து கொள்ள முடியும் என்றால், அவருக்கு எப்படி தமிழர்களின் ஆதிகால பண்பாட்டைபுரிந்து கொள்ள முடியும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி திருப்தி அடையாத தமிழ் இயக்கங்கள்மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பின . முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக