உலகெல்லாம் பாகுபலி II மழை பெய்ய தொடங்கிவிட்டது, எல்லோரையும்
போல நனைந்துவிட வேண்டும்
பாகுபலி எப்படி வென்றது?
அரசர் படங்கள் ஒன்றும் புதிதல்ல, பேசும் படங்கள் வந்த காலத்திலிருந்து வருபவைதான், ஆனால் பாகுபலி எப்படி பெரும் அடையாளமாயிற்று என்றால் அதில் டைரக்டரின் தேடலும், ஆர்வமும் தெரிந்தது, சந்தேகமின்றி சொல்லலாம் இன்றைய ஆசியாவின், ஆசியா என்ன? உலகின் மிக சிறந்த டைரக்கடர்களில் ராஜமவுலியும் ஒருவர்
எல்லோரும் அரசர் கதை எடுக்கலாம், மனோகரா, காஞ்சி தலைவன் என பல வரலாம் ஆனால் வரலாற்றினை 100% கூர்ந்து படிக்காமல் இப்படி ஒரு படம் எடுக்கமுடியாது,
அரசாங்கம், குடும்பம், துரோகம், விசுவாசம், பகை, வஞ்சகம், அரியணை ஆபத்து, உடனிருந்தே கொல்லும் பகை,வீரம், அச்சம், உளவாளிகள் என பலவற்றை தாண்டித்தான் ஆட்சி உண்டு, எக்காலமும் அப்படியே, அந்த விஷயங்களை அப்படியே கொண்டுவந்தார்
படத்தின் மிக முக்கியமான விஷயம் போர் கருவிகளையும், வியூகத்தையும் மிக அழகாக காட்டியது, அந்த கல் எறியும் கருவி பைபிளில் கூட சொல்லபட்டிருக்கின்றது, அம்பு வீசும் எந்திரங்கள் இருந்தன என பல நூல்கள் சொல்கின்றன, யாராவது திரையில் கண்டோமா? பாகுபலிதான் காட்டிற்று
கோட்டைகளை இடிக்க இப்படித்தான் கல் எறிவார்கள், அம்பினை மொத்தமாக இப்படித்தான் எறிவார்கள், இப்படித்தான் வியூகம் இருக்கும், வெற்றிகொடி எவ்வளவு முக்கியமான மனோதத்துவ போர் என ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக சொன்னது பாகுபலி
பல்வாள் தேவன் சங்கிலியினை சுற்றி அடிக்கும் அந்த ஆயுதம் கோட்டை கதவுகளை உடைக்க, யானையின் தலையில் அடித்து கொல்லும் கருவி, மிக அழகாக அப்படத்தில் காட்டினார்கள்.
தளபதியின் சைகைகளுக்கு ஏற்ப நகரும் படை, சங்கேத வார்த்தைகள் என போர்கள காட்சிகளை அப்படியே காட்டியிருந்ததுதான் பார்வையாளர்களை கட்டிபோட்டு படத்தை கொண்டாட வைத்தது,
முக்கியமாக உயிரோடு ஒருவனை பிடிக்க கால்களை சுற்றும் அந்த குண்டு சங்கிலி காட்சிகள் எல்லாம் வரலாற்றில் இருந்தவை, ஆனால் இந்த படத்தில்தான் கண்டோம்
யானை, குதிரை, ஒட்டகம் தவிர வேறு சில பலமிக்க மிருகங்களையும் யுத்தத்தில் பழக்க அக்கால மன்னர்கள் முயற்சித்ததாக செய்தி உண்டு, பல்வாள் தேவன் காட்டெருமையினை அடக்கும் காட்சியும் அழகான வரலாற்று தகவல்..
செங்கிஸ்கானின் படை ஐரோப்பாவில் எப்படி புகுந்தது என வரலாற்று ஆசிரியர்கள் சொன்னார்களோ, அந்த காட்சியினை கானகேயர் காட்சியில் காண முடிந்தது, செங்கிஸ்கான் அப்படித்தான் ஒரு மாதிரி இருந்திருக்கின்றான், ஆனால் மஞ்சள் நிறம்
உச்சமாக ருத்ரதேவி, மங்கம்மாள் போன்ற ராணிகளின் சாயலில் ரம்யா கிருஷ்ணனை காட்டியிருந்தது அபாரம், அம்மணியும் பின்னி எடுத்திருந்தார், அதுவும் காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்து போர் வியூகம் வகுத்த காட்சியில்...... அதனை விளக்க வார்த்தையில்லை,
இனி அப்படி ஒரு கம்பீரம் எந்த நடிகைக்கும் வாய்ப்பில்லை
அடிமை தளபதி எவ்வளவு விசுவாசமானவன் என மாலிக்காபூரை நினைவுபடுத்தியிருந்தார் சத்யராஜ் அபார நடிப்பு
இதனால்தான் சொல்லலாம், ராஜமவுலியினை கண்டு வியக்கவேண்டியிருக்கின்றது, மனிதர் போனபிறவியில் ஏதும் ராஜகுருவாக இருந்திருக்கலாம்..
ஆக பாகுபலிக்கு நட்சத்திரங்கள் கொடுக்க வேண்டுமென்றால் அந்த டைரக்டரின் தேடலுக்கும், நுண்ணிய கவனத்திற்கும் 2 நட்சத்திரம், ரம்யாகிருஷ்ணனுக்கு ஒரு நட்சத்திரத்தில் பாதி, மற்ற நடிகர்களுக்கு மீதி
தொழில்நுட்ப காட்சிகளுக்கு ஒன்று, மிக அபாரமாக செய்திருந்தார்கள்
நிச்சயமாக ஐந்து நட்சத்திரம் கொடுக்க கூடிய படம்தான், ஆனால் குஷ்பூ இல்லாததால் ஒரு நட்சத்திரம் பறிக்கபடுகின்றது,
அவரை மட்டும் ஒரு "ராஜமாதா" காட்சிக்கு வைத்திருந்தால் இந்த நூற்றாண்டின் சிறந்த திரைப்படம் என கொண்டாடி தீர்த்திருக்கலாம்
இனி பாகுபலி II பார்த்துவிட்டு வரவேண்டும், நிச்சயமாக எதிர்பார்ப்பு மிக்க படம்தான், ஆனால்...
உலகின் எல்லா சிறந்த வைரங்களையும் ஒரு மகுடத்தில் பதித்துவிட்டு, கோஹினூர் இல்லாவிட்டால் அது முழுமை அடையுமா? அடைந்ததாக சொல்ல முடியுமா?
குஷ்பூ இல்லா பாகுபலி அப்படித்தான்..
கொண்டாட படவேண்டிய எல்லா தகுதி எல்லாமும் ராஜமவுலியிடம் இருக்கின்றது, கொண்டாடலாம், ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜமவுலி மீது சிறு வருத்தம் ஏற்படத்தான் செய்கின்றது...
அதனால் முறைத்து கொண்டே வாழ்த்தலாம். Stanly Rajan முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக