சிவகங்கை மாவட்டம்
கீழடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும்
நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் மக்கள்தேசம்
அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமAmudhavalli : மதுரை: கீழடியில் நடைபெற்ற அகழாய்வை பாதியில் நிறுத்தியதற்கும், அதன் தலைவராக பணியாற்றிய அமர்நாத்தை அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து மக்கள் தேசம் அமைப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது
அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம்
கண்டுபிடிக்கப்பட்டது.சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர். இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக