தமிழகத்தில்
திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர்
அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர்,
பின் அது நீதிகட்சி என பயணித்தது
அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.
நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார்

மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான்,
அது 1920ல் சென்னை மாகாண ஆட்சியினையும் பிடித்து அசத்தியது, அதாவது
அன்றைய கேரளா, ஆந்திரம் என பிரிக்கபடாத சென்னை மாகாணம்..
அக்கட்சியின் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பெரும் வரலாற்றளர்கள், அக்காலத்திலே லண்டனில் பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..
அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது
பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார்
எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர்
திராவிட கொள்கைக்கும், பெரும் மாற்றத்திற்கும் அடித்தளமிட்ட அவரின் பிறந்த நாள் இன்று
இவரது நினைவால்தான் அன்று புதிதாக உருவாக்கபட்ட சென்னை புறநகர் ஒன்றிற்கு தியாகராய நகர் என அக்கட்சியின் ஆட்சியில் பெயர் சூட்டபட்டது, அவர் பெயரில் அரங்கம் ஒன்றும் கட்டபட்டது
அது இன்று தி.நகர் ஆயிற்று, சென்னையின் மிக முக்கிய பகுதி ஆயிற்று
அதாவது பெரியார் காலத்திற்கு முன்பே திராவிட குரல் எழும்பியது, பலர் எழுப்பினார்கள், பெரியார் அதனை ஆணிதரமாக பிடித்துகொண்டு போராடினார்
அப்படி பெரியாருக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்தான் பிட்டி தியாகராஜர்.
திராவிட வரலாற்றில் மறக்க முடியாத பிதாமகனான அவருக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துகொள்ளலாம்....
முகநூல் பதிவு Stanley Rajan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக