செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஜெனரிக் மருந்துகளையே ( மலிவு ) பரிந்துரைக்க வேண்டும்! மருத்துவ கவுன்சில் டாக்டர்களுக்கு கடுமையான எச்சரிக்கை!


மருத்துவர்கள் மலிவு விலை யிலான ஜெனரிக் மருத்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என, இந்திய மருத்துவக் கவுன்சில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், மருந்துச் சீட்டில் மருந்தின் பெயர்களைத் தெளிவாக எழுத வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஏழை நோயாளிகள் பயன் பெறும் வகையில் அரசு மருந்தகங் கள் மற்றும் மருத்துவமனைகளில் ஜெனரிக் எனப்படும், விலை குறைந்த அதே நேரம், அனைத்து மூலக்கூறு மருந்துகள் அடங்கிய மருந்துகளே விற்பனை செய்யப் படுகின்றன. ஆனால், மருத்துவர் களில் பெரும்பாலானோர் தனியார் மருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு, விலை உயர்ந்த மருந்துகளையே பரிந் துரைக்கின்றனர்.
இதனால், ஏழை, நடுத்தர நோயாளிகள் மருந்து, மாத்திரை களுக்காக செலவிடும் தொகை அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் ஜெனரிக் மருந்துகளைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியும் கூறியிருந்தார். மேலும், இதுதொடர்பாக சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், இதனைப் பெரும் பாலான மருத்துவர்கள் பின் பற்றுவதில்லை. பழையபடி விலை உயர்ந்த பிராண்டட் மருந்துகளை பரிந்துரைப்பதாகவும், மருந்து நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு கொள்ளை லாபம் ஈட்டுவதாகவும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் மருத்துவக் கவுன்சில் தலைவர்கள், அனைத்து மருத்துவமனைகளின் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி களின் முதல்வர்கள், டீன்கள் உள் ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கவுன்சில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவக் கவுன்சி்ல் சுற்றிக்கை யின்படி, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், அதன் விதிமுறைகளைக் கண்டிப் பாகக் கடைபிடிக்க வேண்டும். நோயாளிகளுக்குப் பிராண்டட் மருந்துகளுக்குப் பதிலாக மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகளையே பரி்ந்துரைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய அத்தியாவசிய மருந்து கள் பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு ஏராளமான மருந்துகளை அரசு கூடுதலாகச் சேர்த்துள்ளது. அதேபோல், மத்திய அரசின் (ஜன் அவ்ஷதி) திட்டத்தின்கீழ் மலிவு விலை மருந்து கடைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப் பட்டு வருகின்றன tamilthehindu

1 கருத்து:

Global Solutions சொன்னது…

ஜெனரிக் மருந்துகள் நமக்குக்கிடைத்த வரமே! அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும்!