நேற்றைய அந்த இதழ் அப்படி ஒரு ஆஸ்தான எழுத்தாளர் கட்டுரையை வெளியிட்டுள்ளதாக ஒரு நண்பர் கூறினார்.
இந்தியாவின் மொத்த எம்.பி தொகுதிகளில் எத்தனை சீட் பா.ஜ.கவுக்கு, மொத்த எம்.எல்.ஏ தொகுதிகளில் எவ்வளவு பா.ஜ.கவுக்கு, எத்தனை மாநிலங்களில் அவர்களின் ஆட்சி இப்போது உள்ளது.. என்றெல்லாம் "புள்ளி விவரங்களை" அள்ளி வீசி அளந்திருக்கும் அமித்ஷாவின் பேச்சை அப்படியே ஏற்று இப்படி எட்டாண்டுகளில் இந்து ராஷ்டிரம் முழக்கம் இட்டுள்ளது படு அபத்தம்.
பா.ஜ.கவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு, உயர்சாதி நடுத்தரவர்க்கக் கும்பல் தீயாய் வேலை செய்வது, கார்பொரேட் காசு கொட்டுவது, 'தி இந்து'த்துவா போன்ற அடிவருடி ஏடுகள் சுற்றி வந்து கும்மி அடிப்பது ஆகியவற்றை வைத்து ஒரே அடியாக இப்படியான முடிவுக்கு வருவது அபத்தம்.
பா.ஜ.கவின் வளர்ச்சி, அத்துடன் உருவாகிவரும் சிறுபான்மை மக்கல் மீதான வன்முறை வெறுப்பு அரசியல் குறித்தெல்லாம் அலட்சியமாக இருக்கவேண்டும் என நான் சொல்லவில்லை.
ஆனால் ஒரே அடியாக நாம் இந்த அடிப்படையில் நம்பிக்கை தளர வேண்டியதில்லை.
மிகப் பெரிய அளவில் பா.ஜ.க வெற்றி குவித்துள்ள உ.பி. தேர்தலைத்தான் எடுத்துக் கொள்வோமே. வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே நரேந்திர மோடி "தொங்கு சட்டமன்றம்' அமைந்து விடக் கூடாது என பொதுக்கூட்டங்களில் கெஞ்சியதையும் நாம் மற்ந்து விடக் கூடாது.
இப்போதைய வெற்றியை வைத்து பெரும்பான்மை மக்கள் ஆதரவு இந்துராஷ்டிரத்துக்கு உள்ளது என்பது அபத்தம். இரண்டு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. 1. இந்த வெற்றியில் நமது தேர்தல் முறையின் அபத்தம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 2. எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் விட்ட பிழை இன்னொரு காரணியாக அமைகிறது. சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
தற்போது உ.பியில் பா.ஜ.க பெற்றுள்ள வாக்கு வீதம் 41.4 சதம். சமாஜ்வாதி - காங் கூட்டணி 28 சதம். பகுஜன் கட்சி 22.2 சதம். அப்புறம் அஜித்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தள் முதலான கட்சிகளும் உண்டு. 2007 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது அது வெற்றி பெற்ற தொகுதிகள் 206. பெற்ற வாக்குகள் 30.43 சதம். இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்றுள்ள வாக்குவீதம் 22.2 சதம். வாக்குவீதம் எட்டு சதம்தான் குறைந்துள்ளது. ஆனால் இப்போது வெற்றி பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 19. நமது தேர்தல் முறையின் அபத்தங்களில் ஒன்று இது. மக்கள் பல்வேறு சாதிகளாகவும் மத அடையாளங்களுடனும் பிரிந்து கிடக்கும் நிலையில் ஒரு சிறிய அளவு வாக்கு வீதக் குறைவும் வெற்றி பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விடுகிறது.
இந்தச் சூழலில் நாம் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற கோரிக்கையை வைப்பது ஒருபக்கம். அதுவரை? அதுவரை பல்வேறு அடித்தளச் சாதியினர் சிறுபான்மை மக்கள் இடதுசாரிகள் ஆகியோரை இணைத்து பிஹார் பாணியில் மகா கூட்டணிகளை அமைப்பது ஒன்றுதான் வழி. நிதிஷ் குமாரும், லாலுவும் அதை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்து முடித்தனர். நிதிஷ் ஏரற்கனவே பதவியில் இருந்த தன் கட்சியைச் சேர்ந்த 55 பேர்களை விலக்கிக் கொண்டு அந்த இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டார். அத்தகைய முயற்சி உ.பியில் மேற்கொள்ளப்படாததே தோல்விக்குக் காரணம். குறைந்த பட்சம் அஜித்சிங்கின் ராஷ்tட்ரீய லோக் தள்ளைக்கூட எந்தக் கூட்டணிக்குள்ளும் எதிர்க் கட்சிகளால் கொண்டுவர முடியவில்லை. மோடி அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டுவதிலும் அவை தோல்வியுற்றன.
மேலும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில உண்மைகள்:
* தென் மாநிலங்களில் இன்றுவரை பா.ஜ.க காலூன்ற இயலவில்லை. இங்கு சுமார் 2 சத சட்டமன்றத் தொகுதிகளே அவர்களிடம் உள்ளன.
*கிழக்கில் அவர்கள் ஆதரவு வளர்கிறது, மாநில ஆட்சிகளை அவர்களால் பிடிக்க முடிகிறது என்பது உண்மை. எனினும் இது நீண்ட கால காங் ஆட்சியின் மீதுள்ள வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவர்கள் என்றைக்கும் 'இந்தியா' என்கிற கருத்துக்கும் பா.ஜ.கவின் அகண்ட பாரதக் கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
*இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் கூட உத்தரகாண்டைப் புதிதாகப் பிடித்தாலும் பஞ்சாபை இழந்துள்ளனர். கோவாவும் அவர்களைப் புறக்கணித்துள்ளது. முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக