புதன், 26 ஏப்ரல், 2017

டி.டி.வி.தினகரன் கைது ... தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில்

புதுடெல்லி, அவரது நண்பர் மல்லிகார்ஜூனனையும் டெல்லி குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் ஓட்டல் ஒன்றில் ரூ.1.30 கோடியுடன் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தினை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க டி.டி.வி. தினகரன் முயன்றார் என தெரிய வந்தது.  இதில் சுகேஷ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்தது.  இதனை தினகரன் மறுத்துள்ளார்.  சுகேஷ் யாரென்று தெரியாது என கூறியுள்ளார். டி.டி.வி. தினகரன், “நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை” என்று தொடர்ந்து மறுத்து வருகிறார். என்றாலும் ரூ.10 கோடி கைமாறி  இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தினகரனிடம் டெல்லி குற்ற பிரிவு போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர்.  இந்த 4 நாட்களில் மொத்தம் 37 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.  4வது நாளில் மாலை 5 மணி முதல் தினகரனிடம் விசாரணை நடைபெற்றது.  இந்த விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனனையும் டெல்லி குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி குற்ற பிரிவு போலீசார் தினகரனிடம் முதல் நாளில் 7 மணிநேரம், 2ம்நாளில் 10 மணிநேரம் மற்றும் 3ம் நாளில் 9 மணிநேரம் வரை விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் 4வது நாளான இன்று அவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தினை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனை டெல்லி குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  தினத்தந்தி

கருத்துகள் இல்லை: