சனி, 29 ஏப்ரல், 2017

இங்கிட்டு அதிமுக அணிகள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் ! . அங்கிட்டு 185 தொகுதிகள்?

திமுக ,காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தேர்தலுக்கு தயாராகின்றன. பன்னீர் செல்வம் பழனிசாமி அணிகள் இணைப்புக்கு அல்லது சிறைவாசத்துக்கு தயாராகின்றன ?

 “இன்று பிற்பகலில் இருந்து வீனஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓ.பி.எஸ். இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை குழு டீம் முனுசாமி, மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உட்பட சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய செம்மலை, ‘நேற்று சேலத்தில் நான் நமது கட்சி நிர்வாகிகளுடன் பேசினேன். ஆனால் யாருக்கும் அந்த அணியுடன் இணைவதில் விருப்பம் இல்லை. எல்லோருமே சொல்வது, சசிகலா குடும்பத்துடன் இணைந்து அமைச்சர்கள் நாடகம் நடத்துகிறார்கள். நாம் இணைந்தபிறகு அந்தக் குடும்பம் உள்ளே வந்துவிடும் என்பதுதான். கட்சிக்காரங்க விருப்பத்தைக் கேட்காம நாம இப்படி ஒரு முடிவெடுத்ததே தப்புதான். அதனால அவசரம் எதுவும் இல்லாம திரும்பவும் நிதானமா யோசிக்கலாம். அவங்களும் நமக்கு முதல்வர் பதவியையும் விட்டுத் தரமாட்டேங்குறாங்க. பொதுச்செயலாளரையும் விட்டுத் தரமாட்டாங்களாம். அப்புறம் எதுக்கு நாம அங்கே போகணும். நாம தைரியமா எதிர்த்து நின்றதால்தான் இப்போ நம்மை தேடி வர்றாங்க. நாம அவங்களுக்கு பணிஞ்சு போக வேண்டியது இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். மாஃபா பாண்டியராஜணும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

 ‘செம்மலை அண்ணன் சொல்றது எனக்குக் கூட சரின்னுதான் படுது. நம்ம கோரிக்கை என்னன்னு அவங்களுக்கு தெளிவா சொல்லிட்டோம். ஆனா அவங்க இறங்கி வரவே இல்ல. சசிகலாவே வேண்டாம்னு நாம சொல்றோம். ஆனா, இன்னும் சேலத்தில் எடப்பாடி டீம் நடத்துற கூட்டத்துல எல்லாம் சசிகலா படம் இருக்கு. அவங்க அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வெச்சிருந்தா எப்படி படத்தை மட்டும் வெச்சிருப்பாங்க. நம்ம எல்லோரையும் முட்டாளாக்க திட்டம் போடுறங்க. நாம வெய்ட் பண்றதுல எந்தத் தப்பும் இல்ல. காத்திருப்போம். காலம் வரும். அப்போ பேசுவோம். இனி, நாம போய் அவங்களை பேச்சுவார்த்தைக்கு வாங்கன்னு கூப்பிட வேண்டாம். அவங்க கூப்பிடட்டும்’ என்று அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் பாண்டியராஜன்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்ட பன்னீர்செல்வம், ‘நீங்க சொல்றதைக் கேட்கும்போது அவங்களுக்கு தேவை இணைப்பு இல்ல. இரட்டை இலை அவங்களுக்கு வேணும். அதுக்காக நம்மை தாஜா பண்றாங்க. இன்னைக்கு நைட் அவங்க ஆளுங்க சிலர் பேசுறதா சொல்லியிருக்காங்க. பேசட்டும் பார்க்கலாம். அவசரப்பட்டு நான் தன்னிச்சையா எந்த முடிவும் எடுக்க மாட்டேன். என்னைவிட வயசுலயும் கட்சியிலும் மூத்தவங்க நிறைய இருக்கீங்க. எல்லோரையும் கேட்டு, எல்லோரும் என்ன நினைக்கிறீங்களோ அதன்படிதான் முடிவெடுப்பேன்’ என்று சொல்லி, கூட்டத்தை முடித்து அனுப்பியிருக்கிறார். ஆக, அணிகள் இணைப்புக்கு இப்போதைக்கு சாத்தியமில்லாத சூழ்நிலைதான் தொடர்ந்து நிலவி வருகிறது” என்பதுதான் அந்த மெசேஜ்.
அந்த மெசேஜை வாசித்து முடித்துவிட்டு, ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக்.
“திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்ததையும், அதில் பேசிய விபரங்களையும் முன்பே மின்னம்பலத்தில் எழுதியிருக்கிறோம். அந்த கூட்டத்துக்குப் பிறகு நடந்த சில விஷயங்களை சொல்கிறேன். கூட்டம் முடிந்தபிறகு ஸ்டாலினுக்கு நெருக்கமான சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் அவருடன் உட்கார்ந்து ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது ஸ்டாலின், ‘இப்போ நம்ம பக்கம் கூட்டணி ஸ்டிராங் ஆகிகிட்டே போகுது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி என எல்லோரும் நம்ம பக்கம் இருக்காங்க. இப்போ தேர்தல் வந்தாலும் நாம சாலிடாக 185 எம்.எல்.ஏ., ஜெயிக்கலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்கணும் என்ற அவசியமே இல்ல. பணம் இல்லாமலேயே நம்மால ஜெயிக்க முடியும். தொடர்ந்து, ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் நடத்திக்கிட்டே இருக்கணும்...’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். அங்கிருந்த மாவட்டச் செயலாளர்கள் யாரும் ஸ்டாலின் சொன்னதுக்கு எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அதன்பிறகு தனியாக சில மாவட்டச் செயலாளர்கள் பேசியிருக்கிறார்கள். ‘பணம் கொடுக்காமலேயே ஜெயிக்கலாம்னு தளபதி சொல்றாரு. அது சாத்தியமாகுமான்னு தெரியல. நம்ம பக்கம் இந்தக் கூட்டணி இருந்தால், அதிமுக பக்கம் பாரதிய ஜனதா, பாமக, தமாகா இன்னும் சில முஸ்லீம் அமைப்புகள் இருக்காங்க. இதைவிட விஜயகாந்த்தையும் அவங்க கூட்டணிக்குள் கொண்டு வந்துருவாங்க. விஜயகாந்த்துக்கு தளபதி முதல்வராகக் கூடாது. அதுக்காக, அவரு என்ன வேணும்னாலும் செய்வாரு. எல்லாம் ஒண்ணாகி இரட்டை இலைச் சின்னத்தையும் வாங்கிடுவாங்க. தேர்தல்ல ஓட்டுக்கு பணத்த வாரி வாரி இறைப்பாங்க. அப்ப, போட்டி கடுமையா இருக்கும். ஆர்.கே.நகர்ல தினகரன் டெபாசிட் வாங்கமாட்டார்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். அவரு பணத்த அள்ளிவிட்டாரு. கடைசியில அவரு ஜெயிக்கிற மாதிரிதான இருந்தது. பணம் கொடுத்தா எல்லாம் மாறிப் போயிடும்' என்று புலம்பியிருக்கிறார்கள்’’ என்று முடிந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.  மின்னம்பலல்ம்

கருத்துகள் இல்லை: