புதன், 26 ஏப்ரல், 2017

புதிய மது கடைகள் திறக்க ஐகோர்ட் தடை!

சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வந்து, மதுக் கடைகளை திறக்கும் அரசின் முயற்சிக்கு, தடங்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், மது கடைகளை திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை அகற்றும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில், 3,120 கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் வரும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக மாற்றுவது என, அரசு முடி வெடுத்தது. அதற்கான தீர்மானம் நிறைவேற் றும்படி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும், நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதம் அனுப்பினார்.


இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, சமூக நீதிக்கான வழக்கறிஞர் கள் அமைப்பின் தலைவர், கே.பாலு, தனித் தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
பாரதியின் மனுவில் கூறியுள்ளதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவை, மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மது கடைகளை அகற்ற, அவகாசம் நீட்டிக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாததாக ஆக்கும் வகை யில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை களை, உள்ளாட்சிகளின் கீழ் கொண்டு வர, தீர்மானம் நிறைவேற்றும்படி, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் வேறாக இருந் தாலும், நீதிமன்ற உத்தரவில் இருந்து தப்பிப்பது தான், மறைமுக திட்டமாகும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், அதன் அருகில் இருந்த மது கடைகளை தொடர்ந்து நடத்துவது தான், அரசின் எண்ணம்.

உள்ளாட்சி அமைப்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் இல்லாத போது, தீர்மானம் நிறைவேற் றும்படி, உத்தரவிட முடியாது. தீர்மானம் நிறை வேற்றும் முயற்சியானது, மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.எனவே, நகராட்சி நிர்வாக ஆணையரின் உத்தரவுக்கும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வரவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுக்கள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. ஆர்.எஸ்.பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர்,பி.வில்சன், கே.பாலு சார்பில், மூத்த வழக்கறிஞர், என்.எல்.ராஜா, அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், முத்துகுமாரசாமி ஆஜராகினர்.

பி.வில்சன்: தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் இல்லாத போது, தனி அதிகாரிகளால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாததாக ஆக்கும் எந்த செயலும், அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

என்.எல்.ராஜா: மாநில அரசுகளின் மறு ஆய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள் ளது; அவகாசத்தை நீட்டிக்கவும் மறுத்துள்ளது.

அட்வகேட் ஜெனரல்: பஞ்சாப் மாநிலத்தில் மேற்கொண்டது போல், சாலைகளின் பெயர்களை மாற்ற நினைக்கிறோம். 'பஞ்சாப் மாநில அரசின் முடிவு செல்லும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீடு, உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட பின், விசாரணையை, ஜூலை, 10க்கு தள்ளி வைத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், அவற்றின் அருகில், மது கடைகளை திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ, தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மறு உத்தரவு வரும் வரை அல்லது 3 மாதங் களுக்கு, இந்த உத்தரவு அமலில் இருக்கும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது  தினமலர்

கருத்துகள் இல்லை: