டெல்லியில் போராடி வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர்
பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள்
டெல்லியில 41 நாளாக போராடி வருகின்றனர்.
வறட்சி மாநிலமாக அறிவியுங்கள்.. இவர்களுக்கு பலர் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை அளித்தனர்
. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புன்னகையரசி சினேகா விவசாயிகளுக்கு உதவ அனைவரும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் நாம் உண்ணும் உணவு படைக்கும் விவசாயிகளுக்கு உதவ வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றார்.
இந்த சிறி நிதியுதவி அவர்களின் பிரச்னையை போக்கிவிடாது என்றாலும், எங்களால் இயன்ற உதவியைச் செய்துள்ளோம் என்று சினேகா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய
நடிகர் பிரசன்னா தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெநும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். tamiloneindia;com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக