வியாழன், 19 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் மோடியை சந்தித்த பின் அருள்வாக்கு : யாவும் நன்மையாக முடியும் ...

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அவருடன் புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை பிரதமரைச் சந்தித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ‘தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களும் கடிதத்தின் வாயிலாக ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் பருவமழையால் கிடைக்கவேண்டிய மழையின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் 5௦ சதவிகிதத்துக்கும் மேலாக வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக 39,565 கோடி வழங்க வேண்டுமென அரசு அதிகாரிகளால் அறிக்கை தயார் செய்து அதை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் பிரதமர் அலுவலகத்தில் கொடுத்தனர். அப்போது, பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித்தரும்படி கேட்கப்பட்டதையடுத்து, இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்குத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறினேன். அதை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி பதில் கூறுகையில், minnambalam.com  தமிழர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் கோரிக்கையை நான் நன்றாக அறிந்துள்ளேன்’ என்று கூறினார். மேலும், ‘இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இதுகுறித்து தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு முழு ஆதரவு கொடுக்கும்’ என்றார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.
அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த தடியடி சம்பவமும் நடைபெறவில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘நன்மையே யாவும் நன்மையாக முடியும்’ என்று இறுதியில் கூறினார்

கருத்துகள் இல்லை: