வெள்ளி, 20 ஜனவரி, 2017

வட இந்திய ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான்...இம்முறை வசமாக மாட்டிக் கொண்டது! ஜல்லிகட்டு காளையின் குறி தப்பாது !

உச்சநீதிமன்றதீர்ப்பை
  • காவிரியில் கர்நாடகா மதிக்கவில்லை, முல்லைப் பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மனித பிரமிடு கூடாது என்ற உத்திரவை மகாராஷ்டிரா மதிக்கவில்லை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை. ஜல்லிகட்டில் தமிழகத்தை கட்டுப்படுத்த என்ன அருகதை இருக்கிறது?
  • சுப்பிரமணியசாமி, தமிழன் கட்டிய சிதம்பரம் கோவிலை தீட்சதர்களுக்குக் கொடு என சொன்னான், உச்சநீதிமன்றமும் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாட்டில் மட்டும் கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.
  • ஜல்லிக்கட்டு தொன்மையான தமிழர் பண்பாடு என்கிறோம். கம்ப்யூட்டரில் விளையாடு என தமிழினத்தை கேலி பேசுகிறார் டெல்லி நீதிபதி தமிழனுக்கு இழைக்கும் அநீதி – மோடியும், உச்சுக்குடுமி மன்றமும் சொல்லும் மனுநீதி. பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழின் தொன்மை, பகுத்தறிவு, திராவிடக் கொள்கை களில் தமிழகம் அடையாளமாக நிற்கிறது. இதனால் உச்சநீதிமன்றம், டெல்லி மத்திய அரசு, வட இந்திய ஊடகங்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான், வேப்பங்காய்தான்.
  • தமிழர்கள் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை விளைவினால் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இன்று காளை மூலம் டெல்லி மீது சீறிபாய்கிறது.

  • Backடெல்லி அரசின் உயிர்நிலை வசமாக மாட்டிக் கொண்டது. இம்முறை மாணவர்களின் குறி தப்பாது !
    காளையில் பற்றிய தீ தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லியைப் பொசுக்கட்டும் !

    தகவல் :
    மக்கள் அதிகாரம்,
    தமிழ்நாடு. 99623 66321.வினவு 

    கருத்துகள் இல்லை: