வியாழன், 19 ஜனவரி, 2017

"மோடிமகிமை" ..திரையரங்குகளில் 50 சதவீத வருவாய் இழப்பு...பணமதிப்பிழப்பால் திரையுலகம்...

கோப்புப்படம்பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் திரைப்படத்துறை கடந்த 2 மாதங் களாக கடும் பாதிப்புகளை எதிர் கொண்டு வருகிறது. திரை யரங்குகளில் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
மத்திய அரசு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணப் புழக்கம் குறைந்து பல தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. கறுப்புப் பணம் புழங்கும் திரைப்படத் துறையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதுகுறித்து தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பண மதிப்பு நீக்கமும் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டதால் திரைப்படத் துறை கடும் நெருக்கடிக்கு உள் ளாகி இருக்கிறது. கையிலிருந்த பணத்தையும் செலவழிக்க முடிய வில்லை. வங்கிகளில் இருப்பு உள்ள பணத்தையும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க முடியவில்லை.
பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன்பு சராசரியாக மாதத் துக்கு 25 படங்களுக்கு பூஜை போடுவார்கள். அதில் 20 படங்கள் ரிலீஸ் ஆகும். 5 படங்கள் கடைசி வரை ரிலீஸ் ஆகாமலேயே போய் விடும். ஆனால் பண மதிப்பு நீக்க நட வடிக்கைக்கு பிறகு 2 மாதங் களுக்கு சேர்த்தே 15 படங்களுக் கும் குறைவாகவே பூஜை போடப் பட்டுள்ளது. இதில் தேவையான நிதி உதவி கிடைத்து எத்தனை படங்கள் வெளிவரும் என்பதை உறுதியாக சொல்லமுடியாது.
தயாரிப்பு நிலையில் இப்படி யென்றால் திரையரங்குகளின் வருவாய் அதைவிட மோசமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் 50 சதவீத வருவாய் இழப்பை திரையரங்குகள் சந்தித்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கூட்டம் வருவதில்லை. கையில் பணம் இருந்தாலும் அதை பத்திரப்படுத்தவே மக்கள் நினைக்கிறார்கள். இதனால் குடும் பத்துடன் சினிமாவுக்கு வருபவர் களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
இது சென்னையில் மட்டும் உள்ள நிலைமை. சென்னையில் இருப்பவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கப் பழகி இருப்பதால் பாதிப்பு சற்று குறைவாக உள்ளது. ஆனால், சென்னைக்கு வெளியே இருப்பவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. காசு கொடுத்து டிக்கெட் எடுக்கும் அளவுக்கு இங்குள்ள மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததால் திரையரங்குகளின் வருவாய் இழப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது.
திரைப்படத் துறையில் ஏற்பட்டி ருக்கும் வருவாய் இழப்பால், கடன் வாங்கி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் கடும் நெருக் கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். கடன் கொடுத்த வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் கடனை திருப்பிக் கேட்டு நெருக்கு கிறார்கள். இதுபோன்ற நெருக்கடி களுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காக, புதுப்படங்களுக்கு பூஜை போட்டவர்களில் சிலரும் அடுத்தகட்டத்துக்கு போகாமல் காத்திருக்கிறார்கள். மாதந்தோறும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக பணம் புழங்கும் திரைப்படத் துறையின் முதலீடானது இப்போது பாதியாக குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் முன்னணி நடிகர்கள் சிலரது படங்களுக்கு தேவையான பணத்தை அவ்வப்போது திரட்டி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரு வதால் குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை எடுத்து முடிக்க முடியாத சூழலும், நடிகர்களுக்கு மொத்தமாக சம்பளத்தை கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டிருப்ப தாக தமிழ் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன   tamilthehindu

கருத்துகள் இல்லை: