சனி, 21 ஜனவரி, 2017

நிரந்தர தடை நீங்குவரை போராட்டம் தொடரும் .... போராட்ட குழுவினர் அறிவிப்பு !

நிரந்தர தடை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: மெரீனாவில் போராட்டக்குழுவினர் தகவல் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை தாங்கள் வரவேற்றாலும், நிரந்தர தடை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற வேண்டும். அதோடு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடையை நீக்க வேண்டும். இன்று 5வது நாளாக போராடுகிறோம். இந்த 4 நாட்களும் எங்களுக்கு 4 நிமிடம் போலத்தான் இருந்தது. இன்னும் 40 நாட்களும் இங்கே அமர்ந்து போராட தயாராக இருக்கிறோம். இந்த அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. அவசர சட்டம் என்று சொல்கிறார்கள். இந்த அவசர சட்டம் 6 மாதத்திற்கு பிறகு செல்லுமா என தெரியாது. நிரந்தர தீர்வு வேண்டும். 1960 மிருகங்கள் வதை தடை 11 செக்சன் Nல் திருத்தம் வேண்டும். அது வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க பதியப்படும் என்றனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை: