ஞாயிறு, 8 ஜனவரி, 2017

BBC :நடிகர் ஓம் புரி மரணத்தில் சந்தேகம்: மும்பை போலீசார் புதிய வழக்கு


பிரபல ஹிந்தி நடிகர் ஓம் புரி வெள்ளிக்கிழமை காலமான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது ஒரு விபத்து மரணம் ஏடிஆர்) என்று கூறி மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது மரணம் குறித்து உறவினர்களால் சந்தேகம் எழுப்பப்படும்போது, அதுதொடர்பான விசாரணைக்கு இது உதவும் என்று போலீசார் கூறுகின்றனர்.அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
ஓம் புரி (66) வெள்ளிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பாக இருவேறு கருத்துக்கள் வந்துள்ளன.
ஓம் புரியின் சடலம், சமையலறையில் காணப்பட்டதாக அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது உடல் படுக்கைக்கு அருகிலேயே இருந்ததாக வீட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.>அத்துடன், அவரது தலையிலும் காயம் இருந்தது.
இதுவே, போலீசாரின் சந்தேகத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
ஓம் புரி, 1976-ஆம் ஆண்டு மராத்தி திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
இந்தியாவின் மூத்த நடிகர் ஓம் புரி மரணம்

கருத்துகள் இல்லை: