வெள்ளி, 13 ஜனவரி, 2017

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண்பார்வை கிடைத்தது... பிறவியிலேயே கண்பார்வை இருக்கவில்லை


தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்த வைக்கம் விஜயலட்சுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம். கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும்  போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட  படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’  என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கண்களுக்காக சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமிக்கு கண்பார்வை கிடைத்துள்ளது. பிறப்பிலேயே  கண்பார்வையற்றவராய் பிறந்த விஜயலட்சுமிக்கு பார்வை கிடைத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக் கலைஞருக்கும் டிசம்பர் மாதம் 13-ந் தேதி  திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து மார்ச் 29-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது  குறிப்பிடத்தக்கது மாலைமலர்

கருத்துகள் இல்லை: