கலைஞரின் நினைவாற்றல் வெகு வாக குறைந்துள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களையே அடை யாளம் காண அவர் சிரமப் படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 80 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஓய்வின்றி செயல் பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி, 2 மாதங்களாக கோபாலபுரம் வீட்டிலேயே தொடர் ஓய்வில் இருப்பது அக்கட்சி தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஓய்வின்றி செயல் பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி, 2 மாதங்களாக கோபாலபுரம் வீட்டிலேயே தொடர் ஓய்வில் இருப்பது அக்கட்சி தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ல் அதாவது தனது 44-வது வயதில் தமிழக
முதல் வராகவும், திமுக தலைவராகவும் பொறுப்பேற்றார் கருணாநிதி. முதல்வர்
பதவி இடையிடையே கைவிட்டு போனாலும், 48 ஆண்டு களாக திமுக தலைவர் அவர்தான்.
தனது 13-வது வயதில் திருவாரூரில் ‘நேசன்’ என்ற கையெழுத்து பத்திரிகையை
தொடங்கியவர் 80 ஆண்டுகளாக பத்திரிகை, அரசியல், சமூகப் பணிகளில் ஓயாமல்
இயங்கி வருகிறார்.
ஒவ்வாமை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த
டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை குணமடைந்து 7-ம் தேதி வீடு திரும்பியவருக்கு
டிசம்பர் 15-ம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, மீண்டும்
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுவிடுவதை எளிதாக்க அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ மனையில் இருந்து கடந்த 23-ம் தேதி அவர் வீடு திரும்பினாலும் அவரை
யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நோய்த் தொற்று ஏற்படும் என்பதாலும்,
ஓய்வு தேவைப்படுவதாலும் கருணாநிதியை சந்திக்க யாரும் வர வேண்டாம் என திமுக
தலைமை அலுவலகம் அறிவித்தது.
‘உடன்பிறப்பே...’ என அழைத்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது, அரசியல்
எதிரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் பதில்
அளிப்பது, நாட்டில் நடக்கும் அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து தனது
கருத்துகளை அறிக்கையாகவும், செய்தியாளர்கள் சந்திப்பு மூலமும் உடனுக்குடன்
தெரிவிப்பது, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து
தெரிவிப்பது என ஓயாது இயங்கி வருபவர்.
தினமும் காலையில் எழுந்த தும் யோகாசனம் போன்ற உடற் பயிற்சிகளுக்குப் பிறகு
நாளிதழ் களைப் படித்துவிட்டு தனது அன்றாடப் பணிகளைத் தொடங் குவார்.
சண்முகநாதன், ராஜ மாணிக்கம் உள்ளிட்டோர் உதவியுடன் அறிக்கைகள் தயார்
செய்வார். கோபாலபுரம் வீட்டில் முக்கியப் பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட
அரசியல் பணிகளை மேற்கொண்டாலும் அவர் தங்கு வது சிஐடி காலனியில் உள்ள மகள்
கனிமொழியின் வீட்டில்தான். இரவு தங்குவதும் அங்குதான்.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக கோபாலபுரம் வீட்டிலேயே தங்கி வருகிறார்.
கடந்த 23-ம் தேதி மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவர்
முழுமையான ஓய்வில் இருந்து வருகிறார். அரசியல் செயல்பாடுகள் எதிலும்
ஈடுபடவில்லை. சண்முகநாதன், ராஜமாணிக்கம் போன்றோர் கோபாலபுரம் வீட்டுக்கு
வந்தாலும் அவர்களுடன் கருணாநிதியால் எதுவும் பேச முடியவில்லை. அதனால்
அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘காவேரி
மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும் 6 ஆண் செவிலியர்கள் ஷிப்ட் முறையில்
அவரை கவனித்துக் கொள்கின்ற னர். மருத்துவர்களும் தொடர்ந்து அவரை கவனித்து
வருகின்றனர். ஓய்வின்றி இயங்கியவர் இப்படி வீட்டிலேயே முடங்கியிருப்பதை
எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மு.க.ஸ்டாலின், ராசாத்தி அம்மாள்,
கனிமொழி, செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் தினமும் வந்து பார்க்கின்றனர்.
மு.க.அழகிரியும் குடும்பத்துடன் அடிக்கடி வந்து செல்கிறார்’’ என்றார்.
என்னதான் உடல்நிலை சரி யில்லை என்றாலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு டிசம்பர்
31-ம் தேதி முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லி விடுவார் கருணாநிதி. ஆனால், இந்த
ஆண்டு தலைவரின் வாழ்த்துச் செய்தி இல்லாமல் திமுக தொண்டர்களுக்கு புத்
தாண்டு பிறந்துள்ளது. முகநூல், ட்விட்டர் பக்கங்களிலும் கருணா நிதி
தீவிரமாக இயங்கி வந்தார். ஆனால், கடந்த 2 மாதங்களில் ஒருசில பதிவுகள்
மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன.
நினைவாற்றலுக்காக எப்போ தும் நினைவு கூரப்படுபவர் கருணாநிதி. ஆனால், முதுமை
காரணமாக நினைவாற்றல் வெகு வாக குறைந்துள்ளதாகவும், குடும்ப
உறுப்பினர்களையே அடை யாளம் காண அவர் சிரமப் படுவதாகவும் கூறப்படுகிறது. இது
திமுக தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக