வியாழன், 12 ஜனவரி, 2017

தலைவர்கள் கருத்து! நீதிமன்றம் தாமதம் செய்வது நீதியை மறுப்பதாகும்? தாமதம் தகாதையா!


ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது.தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது தெரிவித்தனர். இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்:

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணா நிதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பது வரவேற்புக்குரியது. ஆனால் இதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடியையும் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் தமிழக மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமதாஸ்:
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க வாய்ப்பில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகையால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனால் அதற்கு கையாலாகாத தமிழக அரசும், துரோகம் செய்யும் மத்திய அரசும் தான் பொறுப்பு. ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனைத்து மக்களும் ஆதரவு தருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவசர சட்டம் கொண்டுவர முடியாது என மத்திய அரசு கூறுவது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயல். இது வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது. வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் அவசர சட்டம் கொண்டுவந்த முன்னுதாரணங்கள் உண்டு. ஆகையால் மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நல்லகண்ணு:
தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் விதமாக மத்திய அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறாவிட்டாலும் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காவிரியில் தண்ணீர் கிடைத்திருந்தால் விசாயிகளுக்கு இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது எனவும் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் :
மத்திய அரசின் தோல்வி சுப்ரீம் கோர்ட்இப்படி அறிவித்துள்ளது என்பது மத்திய அரசின் தோல்வியைக் காட்டுகிறது.அவசரச்சட்டம் ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வாருங்கள் என்று தமிழக முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் மத்திய அரசுக்கு கடிதம் அளித்தார்கள்.அதற்கு மதிப்பளித்தாவது அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.அப்படி கொண்டு வந்திருந்தால் இப்படி ஒரு ஆபத்தான பொறியில் சிக்கி இருக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது. தமிழர்களின் மீதான போர் லட்சக்கணக்கானஇளைஞர்கள் இந்த செய்திக் கேட்டு கொதிக்கிறார்கள். ஒரு அறிவிக்கப்படாத போர்தமிழர்களின் மீது தொடுக்கப்பட்டது போல் உள்ளது. உடனடியாக குடியரசுத்தலைவரை சந்தித்து அவசரச் சட்டம் போட்டு நாளையே நடைமுறைப்படுத்துவதற்குமுன் வராவிட்டால் மத்திய அரசிடம் இருந்து தமிழகம் அன்னியமாகிவிடும் என்றுஎச்சரிக்கிறேன். கசப்பான உண்மை தமிழக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் இது கொடுமையாக உள்ளது. பிரச்சனையின்ஆழத்தை புரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.ஏறுதழுவுதல் பாஜகவின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமானஇல.கணேசன் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றுசொன்னார். அப்படி நடத்தலாம் என்றே நானும் கருதுகிறேன் என்று நாஞ்சில் சம்பத்கூறினார்
தலைவர் ஜி.கே.வாசன் :
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலிருந்து வந்துள்ள அறிவிப்பு வேதனைஅளிக்கிறது. பொங்கல் வாழ்த்து வர வேண்டிய நேரத்தில் துயரச் செய்தி வந்துள்ளது.மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஜனநாயகம் இருக்க வேண்டும்.தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான முயற்சிகளை மத்திய அரசுஎடுத்திருக்க வேண்டும். மாநில அரசும் தக்க நேரத்தில் முறையாக அது நடப்பதற்குவலு சேர்த்திருக்க வேண்டும். இது வேதனை தருவதாக உள்ளது. ஒரு பக்கம்விவசாயிகள் வறட்சியில் வாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாரம்பரியவிளையாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதில் உள்நோக்கம் உள்ளதா என்றசந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டியது உரியவர்களின்கடமையாகும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்:
உச்சநீதிமன்றம் தமிழக மக்களுக்கு ஆதரவான தீர்ப்பளிக்கும் என்றுநம்பியிருந்தோம். மத்திய அமைச்சர் மிகத் தெளிவாக அதைக் கூறியிருந்தார்.நீதித்துறையின் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில்கருத்துக்களை எடுத்து வைப்பது குறித்து ஆராயப்படும் என்றும் தமிழிசைசவுந்தரராஜன் கூறினார். நீதித்துறை மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கவேண்டும். உயிர்போகும் பிரச்சினையில் உடனடியாக தீர்ப்பளிக்க வேண்டும்.இரண்டு நாட்கள் கழித்து தீர்ப்பு அளிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை.நீதிபதிகள் இதை உணர வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவசர சட்டம் உள்ளிட்டமத்திய அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அது அடிபட்டுப் போகும் என்றும்தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தீர்ப்பு வரும் முன் அவசர சட்டம் கொண்டுவர இயலாது என மத்திய அரசும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில்உச்சநீதிமன்றமும் தற்போது விரைந்து தீர்ப்பு வழங்க முடியாது என கூறியுள்ளது.இதனால் சட்டரீதியாக அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்பதால்மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: