35 வருடமாக ஜெ.யுடன் இருக்கும் சசி குடும்பத்து அங்கத்தினர்களை விட வெறும் 15 வருடம் மட்டுமே அதிகார மையங்களுடன் இணைந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் குவித்துள்ள சொத்துகள் ஏராளம்.
"சொத்துக்குவிப்பு
வழக்கில் வரப்போகும் தீர்ப்பு தலைக்கு மேல் கத்தியாக
தொங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில்... சசிகலா நடத்தும் அரசியல் போராட்டம்
மிகவும் கூர்மையானதாக மாறியுள்ளது' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்
நிர்வாகிகள். 35 வருடமாக ஜெ.யுடன் இருக்கும் சசி குடும்பத்து
அங்கத்தினர்களை விட வெறும் 15 வருடம் மட்டுமே அதிகார மையங்களுடன்
இணைந்திருந்த ஓ.பி.யின் மகன் இரவீந்திரநாத் குவித்துள்ள சொத்துகள் ஏராளம்.
"இனி ஒ.பி. போன்றவர்களை வளரவிடக்கூடாது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம்'
என சசியின் சொந்தங்கள் விடாப்பிடியாக சசியை சுற்றி வருகின்றன. "சொத்துக்குவிப்பு
வழக்கு பற்றிய அசைன்மென்ட்டில் நடராஜன் இருக்கிறார். புதிதாகப்
பொறுப்பேற்றுள்ள சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கெஹர் பற்றி அவர் அடிக்கும்
தேவையற்ற கமெண்ட்டுகள் சசிகலாவுக்கே எதிராகப் போய் முடியும்' என்கிறார்கள்
நட ராஜனை விரும்பாத கார்டன் தரப்பினர்.
""மன்மோகன்சிங்கால் சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக கெஹர் நியமிக்கப்பட்டவர். அவர் ராகுல்காந்தி சொன்னால் கேட்பார். நானும் திருநாவுக்கரசும் ராகுலிடம் பேசிவிட்டோம். பழைய தீர்ப்பெல்லாம் வராது. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் இருவரும் புதிய தீர்ப்பு வழங்குவார்கள். அந்தத் தீர்ப்பு அனைத்துக் குற்றங்களையும் ஜெ. மீது போட்டுவிட்டு சசியை விடுதலை செய்துவிடும்'' என நடராஜன், தனக்கு நெருக்கமான மீடியா ஆட்களிடம் சொல்லிவருவது டெல்லியை எட்டியுள்ளதாம். வெளிவட்ட வேலைகளை நடராஜன் எந்தளவு திறம்படச் செய் கிறார் என்பதை வழக்கின் தீர்ப்பு தீர்மானிக்கும்.</">சசியை உலுக்கும் இன்னொரு உறவு இளவரசி. இளவரசியின் சொந்தபந்தங்கள், சசியின் சொந்தபந்தங்கள் போல விரிவானது.
அதிலும் அவரது தம்பிகள், ""எந்த முடிவு என்றாலும் சி.எம். எங்களை கேட்டுதான் முடிவெடுப்பார்'' என ஜெ. உயிரோடு இருக்கும்போதே வெளியில் பேசித் திரிவார்கள். அவர்களின் நடமாட்டமும் அதிகமாகி விட்டது. இளவரசியிடம் செல்வாக்குள்ள கரூர் செந்தில் பாலாஜியை மறுபடியும் மந்திரியாக்க வேண்டும் என சசிகலாவுக்கு பிரஷர் கொடுக்கப்படு கிறது. கூடவே இளவரசி மகன் விவேக்குக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவும், அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவி வழங்கவும் வலியுறுத்துகிறாராம் இளவரசி.
;இளவரசியின் இந்தக் கோரிக்கையை சசிகலா வகை சொந்தங்கள் எதிர்க்கின்றன. விவேக்குக்கு எம்.எல்.ஏ. சீட், கட்சிப் பதவி என்றால் ஒட்டு மொத்த அதிகார மையமும் இளவரசி குடும்பத் தின் கைகளுக்குப் போய்விடும் என்பதுதான் அவர்களது எதிர்ப்புக்கான காரணம்.
சொந்தபந்தங்களிடையே அதிகாரப்போட்டி அதிகரித்துள்ள சூழலில்... சசிகலா தற்பொழுது தனது வசதிக்காக கை காட்டுவது, டி.டி.வி. தினகரனைத்தான். அவருடன் டாக்டர் வெங்க டேஷ் ஒட்டிக்கொள்கிறார். ஜெ. காலத்தில் சசி குடும்பத்திலிருந்து கட்சிப் பொருளாளராக தினகரன் இடம்பெற்றவர்.
அதேபோல் இளைஞர் கள்- இளம்பெண்கள் பாசறை மாநிலச் செய லாளராக ஜெ.வால் நியமிக்கப்பட்டவர் டாக்டர் வெங்கடேஷ். இந்த இருவர் மூலமும் பதவி பெற்றவர்களாகத்தான் சீனியரான ஒ.பி. தொடங்கி ஜூனியர் எம்.எல்.ஏ.க்கள் வரை பலரும் இருக் கிறார்கள். டாக்டர் வெங்கடேஷ் தினகரனுடன் இணைந்து வருவதை மன்னார்குடி சொந்தங்கள் விரும்பவில்லை. "என்னால்தான் ஒ.பி.எஸ். அமைதியாக இருக்கிறார். எனக்குப் பதவி இல்லையென்றால் ஒ.பி.எஸ். அணி உள்ளடி வேலை பார்க்கும்' என வெங்கடேஷ் பேசிவருகிறார்'' என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள். "கட்சிப் பதவி வேண்டும்' என அண்ணன் மகன் மகாதேவன் உட்பட சசியின் சொந்தபந்தங் கள் பலரும் சசிகலாவை நச்சரித்து வருகின்றன. இதற்கிடையே சசிகலாவுடன் இருக்கும் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், ""நான் கம்ப்யூட்டர் மற்றும் தகவல்-தொடர்புத்துறை பட்டப்படிப்பு படித் திருக்கிறேன். எனக்கு ஜெயா டி.வி. நிர்வாகத் தைக் கொடுங்கள்'' என கேட்கிறார். அப்பல் லோவில் ஜெ. பெற்ற சிகிச்சையில் சசிகலா தன்னிச்சையாகச் செயல் படவில்லை எனக் காட்டுவதற்கு கார்டன் தரப்பில் ஒரே சாட்சியாக உள்ளவர் தீபக்தான். "ஜெ. தொடர்பான மருத்துவ ஆவணங்கள் சிலவற்றில் தீபக்கைத்தான் சசிகலா கையெழுத்து போட வைத்துள்ளார் என்பதால், தீபக்கின் கோரிக்கையை சசியால் அலட்சியப்படுத்த முடியவில்லை' என்கிறது கார்டன் வட்டாரம்.
;இப்படிப் பலதரப்பிலும் பதவி நெருக்கடிகள் தொடரும் நிலையில், எல்லோரையும் பஞ்சாயத்து செய்பவர் சசிகலா தம்பி திவாகரன்தான். சசிகலா பொதுச்செயலாளரானபோது, ""இப்போதுதான் அக்கா பொதுச் செயலாளராகியிருக்காரு. உடனே நமது சொந்த பந்தத்துக்கெல்லாம் பதவி கொடுத் தால் அது தவறாகிவிடும்'' என "எங்களுக்கும் பதவி வேண்டும்' என கேட்ட மன்னார்குடி சொந்தங்களை கட்டிப்போட்டார் திவாகரன். அத்துடன், ""நானும் என் மகன் ஜெய்ஆனந்த்தும் அக்காவிடம் எந்தப் பதவியும் கேட்கவில்லை'' எனச் சொல்லி, பதவி கேட்போரை சமாதானப்படுத்தி வருகிறார். திவாகரனும் அவருக்கு உதவியாக உள்ள அவரது மகன் ஜெய்ஆனந்த்தும் கார்டனில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.>சசிக்குத் துணையாக கட்சி விவகாரங்களை டி.டி.வி. தினகரன் வெளிப்படையாகவும், திவா கரன் மறைமுகமாகவும் கவனிக்க, நடராஜன் வெளிவிவகாரங்களைக் கவனிக்கிறார் என்பதுதான் தற்போதைய போயஸ் கார்டன் நிர்வாக அமைப்பு. எந்தப் பதவியிலும் இல்லாத கட்சித் தொண்டர் களின் எதிர்ப்பு ஒருபுறமென்றால், பதவி கேட்கும் சொந்தபந்தங்களின் நெருக்கடி இன்னொருபுறம் என சசிகலா கடுமையான சூழலை எதிர்கொள் கிறார். சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் மொத்த உறவினர்களும்.;"-தாமோதரன் பிரகாஷ்t;படங்கள் : ஸ்டாலின் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக