இன்று
காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களைத்
திறந்து வைத்தார். பிறகு, செய்தியளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு
பெண் கூட்டத்துக்குள் நுழைந்து, அமைச்சரை நோக்கி, ’என்னை போலீஸார்
தாக்கினர்’ என சத்தமாகக் கூறினார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த
போலீஸார் முயன்ற போதும், அவர் தன்னுடைய புகாரைத் தெரிவித்தார். இதனால்,
அங்கு பரபரப்பு எற்பட்டது.
அவர் அமைச்சரிடம், தன்னுடைய பெயர் அன்னபூர்ணா என்றும் சென்னைக்குத் தன் உறவினர்களைக் கண வந்ததாகவும் கூறினார். அப்போது தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் இரவு நேரம் என்பதாலும் பேருந்து நிலைய வாளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவரை போலீஸார் முடியைப் பிடித்து இழுத்து அடித்துத் துன்புறுத்தியதகவும் கூறினார். மேலும், அவரை காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று குப்புசாமி, வீரபாண்டியன் உள்ளிட்ட 5 போலீஸார் கட்டாயப்படுத்தியதாகக் கூறினார். ஆனால், அப்பெண், ’இரவு நேரத்தில் வர முடியாது’ என்று கூறியதால் தகாத வார்த்தைகளைக் கூறி அடித்தார்கள் எனவும் கூறினார்.
அவர் கூறியவற்றைக் கேட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், ’இதுவரையில் இதுபோன்ற புகார் வந்ததில்லை. உங்கள் புகாரில் உண்மை இருந்தால் கண்டிப்பாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு பெண், அமைச்சரிடம் தனக்கு போலீஸார் மூலம் துன்பம் நேரிட்டது, அவர்களால் துன்புறுத்தப்பட்டேன் என்று பலர் முன்பு கூறியும் அமைச்சர் அதனை மனிதாபிமானத்துடன் அணுகாமல் சென்றது அங்கிருந்தவர்களிடம் விமர்சனத்தை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக