கிடப்பில் போடப்பட்டு ள்ள கீழடி அகழ்வாய்வுப் பணிகளுக்கு போதுமான நிதி
ஒதுக்கி 2017-ஆம் ஆண்டிலும் ஆய்வு தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி மூன்று மையங்களில் கண்டன முழக்கப்
போராட்டங்களை நடத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்
முடிவு செய்துள்ளது
.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் ஜனவரி 7-ஆம் தேதிநடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை
:-சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசின்தொல்பொருள் ஆய்வுத் துறை அகழ்வாய்வுப் பணிகளை கடந்த இரண்டாண்டு களாக மேற்கொண்டு வந்தது.
தற்போது 2017-ஆம் ஆண்டிற்கான ஆய்வுப் பணிகளை கிடப்பில் போட்டுள்ளது.தமிழகத்தில் கீழடி யில் நடைபெற்ற அகழ்வா ய்வுப் பணியில் தான் ஐந்தாயி ரத்திற்கும் மேற்பட்ட அரியபொருட்கள் கிடைத்துள் ளன.
கிடைக்கப்பெற்ற பொருட்களை மேலும் ஆய்வு செய்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். குறைந்தது 10 பொருட்களையாவது அனுப்பவேண்டிய நிலையில் வெறும் இரண்டுபொருட்களை மட்டுமே தொல்பொருள் ஆய்வுத்து றை அனுப்பியுள்ளது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் சுமார் 110 ஏக்கரில் ஆய்வுப் பணிகள்நடைபெற வேண்டி யுள்ளது. ஆனால், தற்போது ஒரு சதவீதம் அளவிற்குக் கூட ஆய்வுப் பணிகள் நடைபெறவில்லை.
ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் கீழடி தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி ஆய்வுகள் தொடர மத்திய அரசு அனுமதி யளித்துள்ளது.கீழடியில் மட்டும் அகழ்வாய்வுப் பணிக்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு கோப்புக்களை கிடப்பில் போட்டுவிட்டது. இதன் மூலம் கீழடி அகழ்வாய்வுப் பணிகளை மத்திய அரசு கைகழுவி விட்டதா என்ற கேள்வி யெழுகிறது.
கீழடியில் கிடைக்கப் பெற்ற ஐந்தா யிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றுகூட மதம் சார்ந்த பொருள் இல்லை
. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மதச்சார்பற்ற நாகரிகம் செழித்தி ருந்தது என்பதற்கான அடையாள மாக இப்பொரு ட்கள் அமைந்துள்ளன.சங் பரிவாரம் முன்வைக் கின்ற போலியான ஒற்றைப் பண்பாட்டு வரலாற்றிற்கு எதிராக கீழடி கம்பீரமாக எழுந்து நிற்கிறது
. அதனால் தான் பாஜக அரசு இந்த ஆய்வைத்தொடராமல் கைவிடு கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது
.இந்நிலையில் கீழடி அகழ்வாய்வுப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
இதற்கு உரிய அனுமதியை மத்தியஅரசு வழங்க வேண்டு மென வலியுறுத்தி தமிழகம்முழுவதும் உள்ள எழு த்தாளர்கள், கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பிற கலை-இலக்கிய அமைப்புகளைத் திரட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் தமிழகத்தில் மூன்று மையங்களில் கண்டன முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது
.தென்மாவட்டங்கள் சார்பில் ஜனவரி 22-ஆம் தேதி காலை மதுரையிலும், வட மாவட்டங்கள் சார்பில் ஜனவரி 24-ஆம் தேதி சென்னையிலும் மேற்கு மாவட்டங்கள் சார்பில் ஜனவரி 24-ஆம் தேதி கோவையிலும் கண்டன முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது
.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முகநூல் பதிவு கருப்பு கருணா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக