கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின்
வெற் றிக்கு பணியாற்றாமல், உள்ளடி வேலையில் ஈடுபட்ட, 13 மாவட்ட செயலர்களை
மாற்ற, செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். <
கடந்த,
2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி
பெற வில்லை. குறுநில மன்னர் கள் போல செயல் படும், மாவட்ட செயலர்களின் நட
வடிக்கை களே, படுதோல்விக்கு காரணமாக கருதப்பட்டது. அப்போது,
கட்சியில் மறுசீரமைப்பு ஆய்வு நடத் தப்பட்டது; கட்சி அமைப்பு ரீதியாக
இருந்த, 32 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 65 மாவட்டங் களாக அறிவிக்கப்பட்டன.
கடந்த சட்ட சபை தேர்தலில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்ற மடைந்த, மாவட்ட செயலர்கள் சிலர்,
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் களுக்கு எதிராக,உள்ளடி
வேலையில் ஈடுபட்டனர். இதனால், தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், செயல் தலைவராக பொறுப்பேற் றுள்ள ஸ்டாலின், அ.தி.மு.க., பாணியில், தி.மு.க., வில் களையெடுக்க முடிவு செய்துள்ளார். மாவட்ட செயலர்கள், 13 பேர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபண மாகி உள்ளதால், அவர்களை மாற்றி விட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க, முடிவு செய்துள்ளார்.
தி.மு.க., மாணவரணி மாநில செயலர், கடலுார் புகழேந்தியை மாற்ற செயல் தலைவர்ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் பதவி ஏற்ற பின், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், கட்சி அணிகளில் உள்ள நிர்வாகிகளை மாற்றி வருகிறார். தன் வசம் நீண்ட காலமாக இருந்த, இளைஞ ரணி மாநில செயலர் பதவியை, முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில், தி.மு.க., மாணவரணியின் மாநில செயலராக, கடலுார் புகழேந்தி நீண்ட காலமாக உள்ளார். அவருக்கு, 50 வயதிற்கு மேலாகி விட்டதால், அவரை விடுவித்து விட்டு, புதிய செயலராக, ஸ்டாலினின் ஆதர வாளரும், வழக்கறிஞரு மான பரந்தாமன் நியமிக்கப்பட உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

தி.மு.க., மாணவரணி செயலர் கடலுார் புகழேந்தி மாற்றம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக