திங்கள், 9 ஜனவரி, 2017

அதிமுக மத்திய அரசிடம் நிபந்தனை அற்ற சரணாகதி .. உங்கள் அத்தனை திட்டங்களுக்கு ஆதரவு..


மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிர்வாகத்திலும், அரசியலிலும் மிகத் திறமையானவர். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்திற்கு தேவையானதை சட்ட ரீதியாக அணுகி போராடி வெற்றி காண்பார். அதையடுத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் பல மத்திய அமைச்சர்கள் போயஸ் கார்டனுக்கு வருவதற்கு அனுமதி கேட்டு தவம் கிடப்பார்கள். ஆனால், அவ்வளவு எளிதில் ஜெயலலிதாவை யாரும் சந்தித்து விட முடியாது.< இந்நிலையில் இன்று அதிமுக ஆட்சியும், கட்சியும் அதற்கு நேர்மாறாக நான்காண்டுகால ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டியதன் காரணமாக தலைகீழாக போய் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்தான் இனி தாய் மொழின்னாலும் ஆதரவு கையெழுத்து போடுவாய்ங்கோ.. பதவி முக்கியம் .. கங்கை அமரன் நிலத்தை பறிச்சது போல இளையராஜாவின் நிலத்தையும் பறிக்கணும்ல?

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்க, நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து தேதியும் குறித்துவிட்டார். அவ்வாறு அவர் முதல்வராக பதவியேற்கும்போது அன்றய தினத்தன்று ஆளுநர் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்படியே இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கும் ஆளுநர் மத்திய அரசைமீறி செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு என்ன எதிர்பார்க்கிறது, என்ன செய்யலாம் என்று தம்பிதுரை மூலமாக ஒருபக்கம் காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. மற்றொரு பக்கத்தில் ஓ.பி.எஸ். மூலமாக பாஜக முக்கியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மூன்றாவது ரூட்டாக, முன்னாள் தலைமைச் செயலர் மூலமாகவும் சசிகலா நூல்விட்டு பார்த்து வருகிறார். ஆனால், இந்த ரூட்டானது தற்கொலைக்கு சமமாகும் என்பது சாதாரண சின்ன குழந்தைக்குகூட தெரியவரும் என்பதால் தற்காலிகமாக இந்த பாதையை அடைத்து வைத்துள்ளது சசிகலா & கோ. அதுபோக நேரடியாகவே களத்தில் குதித்து பாஜக தலைமையிடம் சசிகலா குருப் பேசி வருகிறது. ஆகமொத்தம் நான்கு பக்கமும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் சசிகலா குழுவினர் . ஆனால், எந்த திசையில் சென்றாலும் அனைத்து மார்க்கத்திலிருந்தும் ஒரே பதில்தான் வருகிறதாம்.
மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அதுபோல் உதய் திட்டம், நீட் திட்டம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து போடவேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டுள்ளது மத்திய அரசு. எப்படியாவது தமிழக முதல்வராக வேண்டுமென்ற எண்ணத்தில், சசிகலாவும் சரி என்று ஒப்புக்கொண்டதையடுத்து , முதலில் உதய் திட்டத்தை ஆதரித்து கையெழுத்துபோட இன்று 9-ஆம் தேதி திங்கள் கிழமை டெல்லி செல்கிறார் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி. அடுத்தது நீட் திட்டத்துக்கும் கையெழுத்து போடுகிறோம். ஆனால் இரண்டு வருடத்திற்கு பிறகு தமிழகத்தில் அமல்படுத்துங்கள் என்று மத்திய அரசிடம் கெஞ்சி வருகிறது தமிழக அரசு .
எது, எப்படியோ, முதல்வர் பதவியை ஏற்பதற்காக மத்திய அரசு நீட்டும் இடத்தில் கையெழுத்து போடுகிறோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் சசிகலா. ஆனால், சசிகலா முதல்வராவதற்கு , மத்திய அரசு தொடர்ந்து பல தடைகற்களை போட்டுவருகிறது.
ஜெயலலிதாவை நம்பிதான் தமிழக மக்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால் ஜெயலலிதா மறைந்தபிறகு, தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைக்க துணிந்து விட்டார்கள் சுயநலவாதிகள் என்று பொதுமக்கள் மட்டுமன்றி உண்மையான அதிமுக விசுவாசிகளும் வேதனைப்படுகிறார்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: