மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் நீக்கப்பட்டார். அ.தி.மு.க.,
பொதுச் செயலர் சசிகலாவுக்காக, மூன்று ஜோதிடர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.>இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:ஜெ., உயிரோடு இருந்த போது, அவரது முக்கிய நிகழ்ச்சிகள், கட்சி முடிவுகள், வேட்பாளர் பட்டியல் வெளியிடும் தேதி, முதல்வர் பதவி ஏற்பு உள்ளிட்ட அத்தனைக்கும்,
ஜோதிடர் யோசனைப் படியே செயல்படுவார்.
அவர் மறைந்த பின்னும், அந்த டர்,
போயஸ் கார்டன்வந்து சென்றார். ஆனால், அவரை சசிகலா நீக்கி விட்டார்.
தற்போது, சசிகலாவுக்காக, மூன்று ஜோதிடர் குழுவை, அவரது உறவினர்கள்
ஏற்படுத்தி உள்ளனர்.
அதில் ஒருவர், சென்னையைச் சேர்ந்தவர்; மற்ற
இருவரும், மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள். இம் மூவரிடமும், தனித்தனியாக
ஜோதிடம் கேட்கப் படும். இந்த மூன்று ஜோதிடர்களின் கணிப்புகளில், ஒன்றாக
இருக்கும் விஷயத்தை மட்டும், சசிகலா ஏற்றுக் கொள்கிறார்.
அ.தி.மு.க., பொதுக்குழு கூடிய தேதி, பொதுச் செயல ராக பதவி ஏற்ற நாள் ஆகியவற்றை, இந்த ஜோதிடர் குழு தான் கணித்து கொடுத்துள்ளது. முதல்வராக, ஜன., 12 அல்லது, 18ல் பதவி ஏற்க வேண்டும் என, இக்குழு கணித்து கொடுத்துள்ளது. அதில், சசிகலா எதை தேர்வு செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. இவ்வாறு கட்சி வட்டாரம் தெரிவித்தது.
- நமது நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக