வே.மதிமாறன் :;
All of a Sudden ஜெர்மன் படம். அய்ரோப்பாவின் நவீன சினிமாக்கள்
பெரும்பாலும் பாத்ரூம் – பெட்ரூம் – டைனிங் டேபிள் – ரெஸ்டாரண்ட் –
அலுவலகம் இதோடு முடிந்துவிடும். இந்தப் படமும் அப்படிதான். குடிப்பது,
சாப்பிடுவது, முத்தமிட்டுக் கொள்வது, குளிப்பது, உறவு கொள்வது இவற்றுடன்
பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது.
ஆனால் மாலை பார்த்த ஒரு அய்ரோப்பிய படம், கலங்கடித்தது. SON OF SAUL ஹங்கேரி படம். யூதர்கள் மீது நாஜிகளின் கொடூரங்களைப் பல படங்கள் காட்டியிருக்கின்றன. ஸ்பில்பெர்க்கின் Schindler’s List அதற்காகவே ஆஸ்கர் விருது பெற்றது. ஆனால் SON OF SAUL ஏற்படுத்துகிற அதிர்வும் அழுத்தமும் Schindler’s List டை எங்கோ பின்னுக்குத் தள்ளி விட்டது.
இந்த ஆண்டுச் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது SON OF SAUL.
படத்தைப் பார்ப்பதற்கே தைரியம் வேண்டும். ஆடு தொட்டியில் ஆடுகளை வெட்டி இழுத்துச் செல்வதுபோல் தினமும் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்கிற யூத தொட்டி அந்தக் களம். அதில் துப்புறவு பணி செய்கிற ஒருவர், உயிருடன் இருக்கிற ஒரு யூத சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார், அதான் கதை.
துப்புரவு பணி என்றால் குப்பைகளை அள்ளுகிற வேலையல்ல. மனித உடல்களை அள்ளுகிற, ரத்தக்கறையைத் துடைக்கிற வேலை. யூதனான சால், ஹங்கேரியனாகப் புழங்குகிறார். அவர் ஹங்கேரியனாகவே இருந்திருந்தாலும்.. ஏன் ஜெர்மானியனாக இருந்திருந்தாலும் அந்தச் சிறுவனுக்காக அதே அன்பையும் துடிப்பையும் செலுத்தியிருப்பார்.
அவரிடம் இருப்பது இனவாத அன்பல்ல. பேரன்பு பொங்கும் மனிதாபிமானம். அதனால் தான் தன் மகனாக இல்லாதபோதும் அந்தச் சிறுவனை காப்பாற்றுவதற்கு ‘தன் மகன்’ என்று பொய் சொல்கிறார். இந்தப் பொய்தான் படத்திற்கான பெயர் காரணமும் SON OF SAUL.
காட்சிகளின் நேர்த்தியை சாதரணமாகச் சொல்லிவிட முடியாது. எல்லா ஷாட்டுகளுமே lengthy shots. அதோடு நீண்ட காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் ஒரே ஷாட்டிலேயே முடிகிறது.
அநேகமாக 20 காட்சிகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சோலுடனே கேமரா எல்லா காட்சிகளிலும் அல்ல, எல்லா ஷாட்டுகளிலும் பயணிக்கிறது.
1.45 நிமிடத்தில் நம்மை உலுக்கி எடுக்கிறார் இயக்குர் László Nemes.
படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு சிறப்பு, படம் 35 எம்.எம். clouse up ல் அது தருகிற உணர்வை ஒரு போதும் scoop – 70 எம். எம் ஆல் தரவே முடியாது.
எப்படியாவது பாத்துடுங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக