புதன், 11 ஜனவரி, 2017

ஒபாமாவின் பதவி விலகல் பேச்சு .. அட்டகாசமாக முழங்கினார்


சிகாகோ: அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பாரக் ஒபாமா அதிபராக தனது கடைசி உரையாற்றியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.< இந்நிலையில் ஒபாமா மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் சிகாகோவில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
நான் சிறந்த அதிபாரக ஆகியுள்ளதில் மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும். மாற்றத்தை நோக்கிச் சென்ற என் பயணத்தில் இரண்டு அடி முன்னே எடுத்து வைத்தால் ஒரு அடி சறுக்கி பின்னே வந்ததை ஒப்புக் கொள்கிறேன்.

நான் அதிபராக பதவியேற்றபோது இருந்ததை விட அமெரிக்கா தற்போது மேலும் வலுவான நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் செயல்பட முடியாது.< இனத்தால் நம் சமூகத்தில் பாகுபாடு இருந்து கொண்டு இருக்கிறது. தீவிரவாதம் நமது பாதுகாப்பை மட்டும் அல்ல ஜனநாயகத்தையும் சோதித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் நம் நாட்டில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தவில்லை.
கடந்த சில வாரங்களாக எனக்கும், மிஷலுக்கும் வந்து குவியும் வாழ்த்துக்களால் நெகிழ்ச்சி அடைந்துள்ளோம். பொறுப்பை எந்த பிரச்சனையும் இன்றி ஒப்படைப்போம் என்பதை டிரம்புக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். tamiloneindia

கருத்துகள் இல்லை: