சனி, 14 ஜனவரி, 2017

மோடியின் பயணசெலவு விபரங்களை தரமுடியாது .. ஏன் மசாஜ் பார்லர் போனாரா?

புதுடில்லி:'பிரதமரின் பயண செலவு குறித்த விபரங்கள், பாதுகாப்பு தொடர்பானவை என்பதால், அதை வெளியிட முடியாது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு விபரங்களைக் கேட்டு, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிடம், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்தார்.ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இதுவரை வந்த பிரதமர்களி்ல் இவர்தான் சிக்கனமா செலவு செய்யிறாரா? எப்படி இந்த பத்து லட்ச ரூபாயில தங்க நூல் கோட்டு போட்டாரே அப்போதிலிருந்தா? விமானத்துலையே ஓய்வு எடுக்கிறாரா? எவன் வீட்டு காசுல அவரு சுத்துறாரு ? அரசு காசுல சுத்துறது தானே? அரசுக்கு பணம் வருவது வரியால் தானே? அந்த வரியை செலுத்துவது மக்கள் தானே அப்புறம் அவன் கேள்வி கேட்காமல் எவன் கேட்பான். நாடு நாடா சுத்துறது எதுக்கு, இப்ப இவரு நாடுநாடா சுத்தி என்ன கிழிச்சி கொண்டு வந்தார். நாடு நாடா போயி வயலின் வாசிக்கிறது, புல்லட் ரயிலில் ஊர் சுத்துறது, அம்பு விட்டு விளையாடுறது, அதைவிட முக்கியமா செல்பி எடுக்கிறது. இதுதான் மக்களுக்காக உழைக்கிறதா? ஆமா தொழிலதிபர்கள் எதுக்கு போறாங்க அவங்களுக்கும் அரசுக்கும் என்ன சம்மந்தம்? அவர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்க இவரு இடைத்தரகரா போறாரா? மோடிக்கு அதானியும் அம்பானியும் தான் நண்பர்களாக இருப்பார்கள் அப்புறம் ஏழை மக்களா நண்பர்களாக இருப்பார்கள், உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பது மோடிக்கும் பொருந்தும் அல்லவா? அந்த தீஞ்சிபோன வரப்பிரசாதத்தை நீங்களே முழுங்குங்கள் அடுத்தவங்களை முழுங்க சொல்லாதீர்கள்.


இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத் திடம், அவர் கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து, பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் பதிலளிக்க, தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த வழக்கை, நேற்று விசாரித்த, மத்திய தகவல் ஆணையர் மாத்துார் கூறியதாவது:

பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம், வெளியுறவு, பாதுகாப்பு உட்பட, பல அமைச்சகங்கள் தொடர்பானது. இந்த தகவல்கள் மிகவும் ரகசியமானவை; அதன் விபரங்களை வெளியிடுவது, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பது ஏற்கத்தக்கது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், இதற்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது; எனவே,
அதுபற்றிய தகவல்களை அளிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் விதிமீறல்

'சட்டசபை தேர்தல் நடக்கும், உ.பி., - கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், பெட்ரோலிய நிறுவனங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் படத் துடன் விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன; தேர் தல் விதிமீறல்'என, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலருக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

புதிய இந்தியா உருவாக்க இளைஞர்களுக்கு அழைப்பு

''தேசத்தை பாதிக்கும் கறுப்புப் பணம் உள்ளிட்ட தீய சக்திகளிடம் இருந்து மீட்டு, புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர் சக்தி முன்வர வேண்டும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலம் ரோடக்கில் நேற்று நடந்த, 21வது தேசிய இளைஞர் திருவிழாவை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் துவக்கி வைத்து, பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:

நாட்டின் மொத்த மக்கள் தொகையான, 125 கோடி பேரில், 80 கோடி பேர், 35 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள். இந்த இளைஞர் சக்தியை, சரியாக பயன்படுத்த வேண்டும். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், கறுப்புப்பணம் உள்ளிட்ட தேசத்தை பாதிக்கும் தீய சக்திகளை எதிர்த்து போராட, இளைஞர்கள் முன் வரவேண்டும்.

கறுப்புப் பணத்துடன், ஜாதி, மத பாகுபாடு, தீண்டாமை, பெண்களுக்கு எதிரான கொடுமை போன்றவற்றையும் ஒழிக்க, இளைஞர் சக்தி ஒன்று திரள வேண்டும். ஊழல் இல்லா,கறுப்புப் பணம்< இல்லா நாடு என்ற இளைஞர் களின் கனவே, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஊக்கமளித்தது.

புதிய சிந்தனைகள் உருவாக வேண்டும்; சிந்திக்க தவறிவிட்டால்,வாழ்க்கை ஸ்தம் பித்து விடும். இன்றைய இளைஞர்களின் செயல்பாடுதான், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து, அனைவருக்கும் தெரியபடுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆன்மிகம் மனித தத்துவம்

இந்த விழாவின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்த கேந்திரா வில் நடக்கும் ராமாயண தரிசன கண் காட்சியை, 'வீடியோ கான்பரஸ்' மூலம், மோடி துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:

இளைஞர் சக்தி, பொருள் ஈட்டுவதுடன், ஆன்மிகத்தையும் கற்க வேண்டும். ஆன்மிகம் என்பது, ஒரு மதத்துடன் தொடர்புடையது அல்ல;அது மனித தத்துவத்துடன் இணைந்தது. மனித குலத்தின் நலனுக்காக பாடுபட்ட, சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், சமூக ஆர்வலர் ஏக்நாத் ரனடே ஆகியோரை நினை வில் வைத்து, செயல்பட வேண்டும் என பேசினார்.< தினமலர்

கருத்துகள் இல்லை: