வியாழன், 12 ஜனவரி, 2017

சசிகலாவுக்கு பீதியை கிளப்பும் 171 தொகுதி பெண் வாக்காளர்கள்?

ஜெ. மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை பிடிக்க இப்படிப் பல கட்சிகளும் முயற்சிக்கின்றன. பழைய அரசியல் கணக்குகள் இப்போது பயனளிக்காது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஒ.பன்னீரும் சசிகலாவும் அ.தி.மு.க. வாக்குவங்கியை கைப்பற்றும் அசைவுகளை உணர்ந்தே இருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை என்றதும் மாநிலம் முழுக்க அமைச்சர்களை அனுப்பியதோடு, வறட்சி மாநில அறிவிப்பும் இந்த அசைவுகளை கணக்கில் கொண்டுதான் என்கிறார்கள். அதேநேரத்தில் அ.தி.மு.க. சற்றும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு வந்த கட்சி சாராத பொதுமக்களை தன்வசப்படுத்த தி.மு.க. முயற்சிகளை எடுக்கிறது. ஜெ.வின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது, ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க வேண்டுமென கேள்வி கேட்டது, ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை, பொங்கல் விடுமுறை என தமிழகத்தை உலுக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் விரைவாக அறிக்கை விடுவது என ஸ்டாலின் செயல் தலைவர் ஆனதும் தி.மு.க.வின் வேகம் அதிகரித்துள்ளது என அ.தி.மு.க.வினரே ஒத்துக்கொள்கிறார்கள். "சசிகலாவின் புதிய தலைமையை அ.தி.மு.க.வின் வாக்குவங்கியான பெண்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 171 தொகுதிகளில் பெண்கள்தான் அந்தத் தொகுதியின் முடிவைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களது மனங்களை வெல்ல ஸ்டாலின் முயற்சிக்கிறார்'' என்கிறது, அறிவாலயம் வட்டாரம்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: