திங்கள், 9 ஜனவரி, 2017

இதுவரை 125 விவசாயிகள் தற்கொலை .. ஆணவத்தில் மறுத்து பேசும் அதிமுக அமைச்சர்கள்

சம்பா சாகுபடி பொய்த்ததால் தமிழகத்தில் 125 விவசாயிகள் இறந்துபோயிருக்கிறார்கள். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பாரமுகமாக இருந்துவரும் தமிழக அரசைநோக்கி தேசிய மனித உரிமை ஆணையம் கண்டனக்குரல் கொடுத்த பிறகே விழித்துக்கொண்டுள்ளார்கள் அமைச்சர்கள். கர்னாடகம் ஆளுக்கு முந்தி வறட்சிமாநிலமாக அறிவித்துவிட்டு, மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடும் பெற்றிருக்கிறது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டிய அமைச்சர்கள் அப்படிச் செய்யாததோடு, விவசாயிகளின் ஆத்திரத்தைக் கிளப்பும் அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்கள். “தமிழகத்தில் உடல் உபாதையாலும் நோயாலும் விவசாயிகள் இறந்தார்களே தவிர, வறட்சியால் யாரும் இறக்கவில்லை” என ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார்
தொழில்துறை அமைச்சர் சம்பத். அவரது அறிக்கை இப்படியிருக்க, சுற்றுலா அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் யாரும் சாகவில்லை” என திருவாய் மலர்ந்திருக்கிறார். அமைச்சர்களின் வாய்க்கொழுப்பு பேச்சுகள் விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலரிடமிருந்து கண்டனம் கிளம்பியுள்ளது நக்கீரன்


கருத்துகள் இல்லை: